திருமணத்திற்கு பிறகு ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் – எளிய வழிமுறைகள் இதோ!

0
திருமணத்திற்கு பிறகு ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் - எளிய வழிமுறைகள் இதோ!
திருமணத்திற்கு பிறகு ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் - எளிய வழிமுறைகள் இதோ!
திருமணத்திற்கு பிறகு ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் – எளிய வழிமுறைகள் இதோ!

தனித்துவ அடையாள அட்டையான ஆதார் அட்டைகளை அடிக்கடி அப்டேட் செய்து கொள்வது அவசியமானதாகும். அதன் படி திருமணமான ஒருவர் தனது ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்துகொள்ளும் எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டைகள்

ஒவ்வொரு தனி மனித அடையாள ஆவணமாக ஆதார் அட்டைகள் கருதப்படுகிறது. இந்த ஆதார் அட்டையில் இடம்பெற்றிருக்கும் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி போன்ற தகவல்கள் தான் தற்போது பல சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தேவைப்படும் முக்கிய ஆவணமாகும். நம்மில் பலர் முதன் முதலில் எடுத்த ஆதார் அட்டைகளை தற்போது வரை உபயோகப்படுத்தி வருகின்றனர். அப்படி இல்லாமல் ஆதார் அட்டையில் உள்ள ஒவ்வொரு தகவல்களும் முக்கியம் என்பதால் அவற்றை முறையாக பராமரிப்பதும் அடிக்கடி புதுப்பிப்பதும் அவசியமாகும்.

மாதந்தோறும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் – உத்தரகண்ட் மாநில மின்வாரியம் அறிவிப்பு!

இதில் குறிப்பாக திருமணமாகும் பெண்கள் வேறு இடங்களுக்கு செல்ல நேரிடுவதால், அவர்களது ஆதார் அட்டைகளில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை மாற்றுவது கட்டாயம். அந்த வகையில் ஆன்லைன் வழியாகவே சில எளிய வழிமுறைகளை பின்பற்றி ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்து கொள்ள முடியும். இதற்காக,

 • முதலில் online self-service update என்ற போர்ட்டலை லாகின் செய்து கொள்ளவும்.
 • பிறகு உங்களது பெயரை மாற்ற Request என்ற ஆப்சனை பயன்படுத்தவும்.
 • அதில் அரசு வழங்கிய முகவரி அடங்கிய திருமண சான்றிதழை பதிவேற்ற வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

 • பிறகு ஆதார் அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
 • அந்த OTP எண்ணை பதிவு செய்து, ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.
 • இதற்காக நீங்கள் கட்டணம் செலுத்தத்தேவையில்லை.

ஆதார் மையத்துக்கு சென்று புதுப்பிக்க விரும்பினால்,

 • வீட்டிற்கு அருகில் உள்ள ஆதார் மையத்துக்கு செல்லவும்.
 • யாருடைய பெயரை மாற்ற வேண்டுமோ, அவர்களது பெயர் மாற்றத்துக்கு
 • தேவையான அசல் ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும்.
 • அவை ஸ்கேன் செய்யப்பட்டவுடன், திரும்ப உங்களுக்கு கொடுக்கப்படும்.
 • பிறகு அரசு வழங்கிய முகவரி அடங்கிய திருமண சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
 • இதற்காக நீங்கள் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here