நவம்பர் 10 வரை எட்டு நகரங்களில் இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
நவம்பர் 10 வரை எட்டு நகரங்களில் இரவு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
நவம்பர் 10 வரை எட்டு நகரங்களில் இரவு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
நவம்பர் 10 வரை எட்டு நகரங்களில் இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட எட்டு நகரங்களில் வருகிற நவம்பர் 10ம் தேதி வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்து உள்ளது. பண்டிகை நாட்கள் வருவதையொட்டி தளர்வுகளில் கவனம் தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

இந்தியாவில் கொரோனா 2வது அலையை தடுக்கும் நோக்கில் மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதில் பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மெல்ல இயல்பு நிலை திரும்பி உள்ளது. இருப்பினும் கொரோனா 3வது அலை அச்சத்திற்கு மத்தியில் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநில அரசு அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், காந்திநகர், ஜூனாகத் மற்றும் பாவ்நகர் ஆகிய நகரங்களில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சத்துணவு மைய ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 ஆக நீட்டிப்பு – அரசாணை வெளியீடு!

இந்த கட்டுப்பாடுகள் நவம்பர் 10 வரை தொடரும். பண்டிகைக் காலங்கள் காரணமாக நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்ற அச்சத்திற்கு மத்தியில் அரசாங்கத்தின் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. கொரோனா 2வது அலையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் குஜராத்தும் ஒன்றாகும். மாநிலத்தில் 20 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,26,080 ஐ தொட்டது. இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,15,816 ஆக உள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 10,085 ஆக அதிகரித்துள்ளது.

இணையவழி பணப்பரிமாற்றத்தில் அதிகபட்ச வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்வு – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!

கொரோனா 3வது அலையில் 18 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். எனவே கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியுடையோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!