இணையவழி பணப்பரிமாற்றத்தில் அதிகபட்ச வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்வு – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!

0
இணையவழி பணப்பரிமாற்றத்தில் அதிகபட்ச வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்வு - ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!
இணையவழி பணப்பரிமாற்றத்தில் அதிகபட்ச வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்வு - ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!
இணையவழி பணப்பரிமாற்றத்தில் அதிகபட்ச வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்வு – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!

நாட்டில் இணையவழியில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அதிகபட்ச வரம்பு இதுவரை ரூபாய் 2 லட்சமாக இருஙக நிலையில் தற்போது அதை 5 லட்சமாக உயர்த்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

IMPS பணப்பரிமாற்றம்:

நமது வங்கி கணக்கில் இருந்து மற்ற வங்கி கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்வதற்கு மக்கள் நேரடியாக வங்கி கிளைகளை அணுக வேண்டியதில்லை. இதற்காக வங்கி நிர்வாகத்தினர் பல்வேறு ஆன்லைன் வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். தற்போது வங்கிகள் National Electronic Fund Transfer (NEFT), Real Time Gross Settlement (RTGS), Immediate Payment Service (IMPS) போன்ற பணப்பரிமாற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. பண பரிவர்த்தனையின் மதிப்பு, பரிமாற்றத்தின் வேகம், சேவை வழங்கும் நேரம் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் பரிமாற்றம் வகைப்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் இன்று 1,359 பேருக்கு கொரோனா பாதிப்பு – அரசு அறிக்கை!

IMPS முறை உடனடி பண பரிமாற்ற முறையாகும். இது சாதாரண மக்களால் பெரும்பாலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட் போன்கள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் இந்த முறையில் தான் நடக்கிறது. இதன் மூலம் 24/7 உடனடியாக பண பரிவர்த்தனை செய்ய முடிவும். விடுமுறை நாட்களிலும் இந்த சேவையை பயன்படுத்த முடியும். இந்த முறைக்கான அதிகபட்ச வரம்பு ரூ.2 லட்சமாக முன்னர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தனது நாணய கொள்கை கூட்டத்தில் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

அதில், IMPS பணப் பரிமாற்ற சேவையில் ஒரு நாளுக்கு அதிகப்படியாக 2 லட்சம் ரூபாய் மட்டுமே பரிமாற்றம் செய்யப்படும் நிலையில், இந்த வரம்பு 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். நாட்டின் சில்லறை பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 5.3 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!