SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சம்பள கணக்கின் 5 நன்மைகள்!!
SBI வங்கியில் சம்பள கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்த வங்கி, பூஜ்ஜிய இருப்பு போன்ற சலுகைகளை வழங்கி வந்தது. தற்போது அவ்வங்கி வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல சலுகைகளையும் வழங்க உள்ளது.
கூடுதல் சலுகைகள்
இந்தியாவின் முன்னணி வங்கி சேவை நிறுவனமான SBI அதன் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. பொதுவாக மாத சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு SBI வங்கி சிறப்பு சலுகைகளை கொடுத்துள்ளது. அதன் படி மாத சம்பளம் பெறுபவர்களின் SBI வங்கி கணக்கு, பூஜ்ஜிய இருப்பாக உள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தவிர sbi.co.in என்ற SBI வங்கியின் அதிகாரபூர்வ இணையதளம் தெரிவித்துள்ள படி, SBI வங்கியில் மாத சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மேலும் சில காப்பீட்டு சலுகைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது தனிநபர் கடன், வீட்டுக் கடன், கார் கடன், கல்விக் கடன் போன்றவற்றில் அவ்வங்கி சில தள்ளுபடிகளை வழங்குகிறது. அதன் படி SBI வழங்கும் சலுகைகளில் சில:
- தற்செயலான மரணம்: SBI வங்கியில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 20 லட்சம் வரை தற்செயலான மரண பாதுகாப்புக்கு உரிமை உண்டு.
- விமான விபத்து மரணம்: அதிகாரப்பூர்வ sbi.co.in வலைதளத்தின் படி, விமான விபத்து காரணமாக மரணம் ஏற்பட்டால், SBI வங்கியில் சம்பள கணக்கு வைத்திருப்பவர் 30 லட்சம் வரை ஏர் ஆக்சிடென்டல் இன்சூரன்ஸ் பாதுகாப்புக்கு உரிமை உண்டு.
- கடன் செயலாக்க கட்டணத்தில் 50% தள்ளுபடி: தனிநபர் கடன், வீட்டுக் கடன், கார் கடன் போன்ற எந்தவொரு கடனுக்கும் SBI சம்பள கணக்கு வைத்திருப்பவர் 50 சதவீத செயலாக்க கட்டணத்தை பெற முடியும்.
- ஓவர் டிராஃப்ட் வசதி: SBI வங்கியில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவ்வங்கி ஓவர் டிராஃப்ட் வசதியை வழங்குகிறது. இதன் கீழ் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாத சம்பளத்தை அளிக்கிறது.
- லாக்கர் கட்டணத்தில் தள்ளுபடி: SBI வங்கியில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு லாக்கர் கட்டணத்தில் 25 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கிறது.