SSC தேர்வாணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,42,400 || உடனே விண்ணப்பியுங்கள்!    

0
SSC தேர்வாணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.1,42,400 || உடனே விண்ணப்பியுங்கள்!    

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தலைமை செயலகத்தில் காலியாக உள்ள Accountant, Accounts Officer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC)
பணியின் பெயர் Accountant, Accounts Officer
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.05.2024 (Within 2 Months)
விண்ணப்பிக்கும் முறை Offline

SSC பணியிடங்கள்:

SSC தேர்வாணையத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Accountant – 07 பணியிடங்கள்
  • Accounts Officer – 05 பணியிடங்கள்

Accountant / Accounts Officer பணிக்கான தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய அரசு அலுவலகங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் வரும் நல்ல செய்தி – வெளியான முக்கிய தகவல்!

Accountant / Accounts Officer வயது விவரம்:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Accountant / Accounts Officer ஊதிய விவரம்:

  • Accountant பணிக்கு ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை என்றும்,
  • Accounts Officer பணிக்கு ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

SSC தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

SSC விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 25.05.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!