Post Office ல் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம் – மாதம் ரூ. 2,500 வரை லாபம்!

0
Post Office ல் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம் - மாதம் ரூ. 2,500 வரை லாபம்!
Post Office ல் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம் - மாதம் ரூ. 2,500 வரை லாபம்!
Post Office ல் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம் – மாதம் ரூ. 2,500 வரை லாபம்!

இந்திய தபால் அலுவலகத்தில் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்தால் ரூ.2,500 மாத வருமானம் வரை மாத வருமானம் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தினை 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் தொடங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போஸ்ட் ஆபீஸ்:

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் அவசியமான ஒன்றாக உள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள நடுத்தர மற்றும் மாத வருமானத்தில் குடும்பத்தை நடத்தும் சாமானியர்களுக்கு இந்த முதலீடு என்பது மிக அரிதாகும். இந்த நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் இத்தகைய முதலீடுகளில் சேமிப்பது என்பது முடியாத ஒன்றாகும். இதன் காரணமாக போஸ்ட் ஆஃபிஸில் மிக குறைந்த முதலீடு மூலம் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். அதாவது, மாதம் ரூ.250 முதல் சேமிப்பை தொடங்கலாம்.

மேலும் போஸ்ட் ஆபீஸ் மூலம் சேமிப்பதன் மூலம் பணத்திற்கு முழு உத்தரவாதம், வருமான வரி விலக்கு, போன்ற சலுகைகள் வழங்கப்படும். இந்தியாவில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில், வங்கிகளுக்கு இணையாக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் அதிகமாக போஸ்ட் ஆஃபிஸில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கினால் மாதம் ரூ. 2,500 வரை லாபம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கின் மூலம் பெறப்படும் வட்டியில் இருந்து கல்வி கட்டணம் செலுத்த எதுவாக இருக்கும்.

இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்பு – UGC வெளியீடு!

இந்த கணக்கை இந்தியாவில் உள்ள எந்த தபால் அலுவலகத்தில் வேண்டுமானாலும் தொடங்கலாம். மேலும் இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1000 முதல் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதற்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த கணக்கை குழந்தைகள் கணக்கில் தொடங்கி ரூ. 2 லட்சத்தை அவர்கள் பெயரில் டெபாசிட் செய்தால் ஒவ்வொரு மாதமும் வட்டி தற்போதைய 6.6 சதவீதத்தில் ரூ.1100 கிடைக்கும். மேலும் 5 ஆண்டுகளில் இந்த வட்டி மொத்தம் ரூ. 66 ஆயிரமாக மாறும். கணக்கு முடிவு இறுதியில் ரூ.2 லட்சம் உங்களது கணக்கில் திரும்ப செலுத்தப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!