இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்பு – UGC வெளியீடு!

0
இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்பு - UGC வெளியீடு!
இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்பு - UGC வெளியீடு!
இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்பு – UGC வெளியீடு!

இந்தியா முழுவதும் மொத்தமாக 21 போலியான பல்கலைக்கழகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் என்னென்ன போலியான பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன என்பதற்கான முழு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

போலி பல்கலைக்கழகம்

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நிறுவனம் தற்போது இந்தியாவில் உள்ள 21 போலி பல்கலைக்கழகங்களை அடையாளம் கண்டுள்ளது. அதாவது, இந்த 21 பல்கலைக்கழகங்களும் விதிமுறைகளை மீறியதாகவும், போலியானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த பல்கலைக்கழகங்கள் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதற்கான அனைத்து விவரங்களையும் யுஜிசி ugc.ac.in என்கிற இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தற்போது போலியான பல்கலைக்கழகங்களின் விவரங்களை பார்க்கலாம். டெல்லியில் மட்டுமே எட்டு போலியான பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதாவது, அகில இந்திய பொது மற்றும் உடல் ஆரோக்கிய அறிவியல் நிறுவனம், வணிக பல்கலைக்கழகம் லிமிடெட் டார், அகஞ்ச், ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், தொழிற்கல்வி பல்கலைக்கழகம், ADR-சென்ட்ரிக் ஜூரிடிகல் பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், சுயதொழில் செய்பவர்களுக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம், மற்றும் அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மீக பல்கலைக்கழகம்) ஆகிய 8 பல்கலைக்கழகம் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சாரண, சாரணியர் இயக்கம் – கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நியமனம்!

அதே போல உத்தரபிரதேசத்திலும் காந்தி ஹிந்தி வித்யாபித், தேசிய எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம் (திறந்த பல்கலைக்கழகம்) மற்றும் பாரதிய சிக்ஷா பரிஷத் என ஏழு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் போலியான பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!