மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை - சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை - சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்க வரும் 20 ஆம் தேதி மட்டும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை விட இருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

சிறப்பு விடுமுறை

நாடு முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் பல மாநிலங்களில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் தற்போது முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. அவர்களது ஆட்சிக்காலம் முடியவடைய உள்ள நிலையில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகிற 20 ஆம் தேதி தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உத்தேச 11 வீரர்கள் லிஸ்ட் ரெடி!

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இந்த 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் , 14 ஆம் தேதி தேர்தல் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்டோர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததை அடுத்து அது 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் நடைபெற இருக்கிறது. அதற்காக பல அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post Office பணத்தை அள்ளித்தரும் திட்டம் – தினமும் ரூ.150 சேமித்தால் 20 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ்!

இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக மாநிலம் முழுவதும் 20 ஆம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், அரசு ஊழியர்கள் வாக்களிக்க ஏதுவாக அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற அவர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை விட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here