சுதந்திர தினவிழா: முதல்வரின் சிறப்பு பதக்க விருதுகள் – 33 பேர் தேர்வு!
ஆகஸ்ட் 15 நாள் நடைபெற உள்ள சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த 33 பேருக்கு முதல்வரின் சிறப்பு பதக்க விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு பதக்க விருதுகள்:
நாட்டின் 75வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக முதல்வர் கொடி ஏற்றி விழாவினை சிறப்பிப்பார். அதேபோல் மாநில அளவில் அனைத்து மாநில முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றுவர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதன் முறையாக சென்னை கோட்டையில் கொடியேற்ற உள்ளார். மாவட்ட அளவில் கலெக்டர்கள் கொடி ஏற்றுவார்கள். மேலும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவற்றிலும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்று. ஆனால் இம்முறை கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
ஆகஸ்ட் 15ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து ஆண்டுதோறும் சுதந்திர தின விழா அன்று தமிழக அரசின் சார்பாக பல்வேறு வித சேவைகளை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படும். டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் 75வது சுதந்திர தின விழாவில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு துறையை சார்ந்த சாதனையாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படும்.
இதனை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு துறையில் 9 பேருக்கும், காவல்துறையில் 3 பேருக்கும், தீயணைப்புத் துறையில் 3 பேருக்கு முதல்வரின் சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது. நகராட்சி நிர்வாகத் துறையில் 6 பேருக்கும், வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையில் 3 பேருக்கு சிறப்பு பதக்கம் அளிக்கப்படுகிறது.
TN Job “FB
Group” Join Now
கூட்டுறவுத் துறையில் 3 பேருக்கு, ஊராட்சித் துறையில் 6 பேருக்கு என 33 பேருக்கு முதல்வரின் சிறப்பு பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் ரவி, காளீஸ்வரி, சுகந்தி, விக்ரம் குமார், ஹேமாம்பிகா மற்றும் ஆதித்யா ஆகியோருக்கும் செவிலியர் கோமதி, ஆய்வக நுட்புணர்கள் ரெஸ்ட்லின், அம்மா பொண்ணுக்கும் சிறப்பு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.