அஞ்சலகங்களில் தங்க பத்திர விற்பனை தொடக்கம் – ஒரு கிராம் விலை 4,732 ரூபாய்!

0
அஞ்சலகங்களில் தங்க பத்திர விற்பனை தொடக்கம் - ஒரு கிராம் விலை 4,732 ரூபாய்!
அஞ்சலகங்களில் தங்க பத்திர விற்பனை தொடக்கம் - ஒரு கிராம் விலை 4,732 ரூபாய்!
அஞ்சலகங்களில் தங்க பத்திர விற்பனை தொடக்கம் – ஒரு கிராம் விலை 4,732 ரூபாய்!

தங்க சேமிப்பு பத்திர திட்டதில் நேற்று முதல் தங்க பத்திர விற்பனை அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,732 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தங்க பத்திரம்:

மத்திய அரசு தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக 2015 நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது . இதில் தங்கத்தை ஆவண வடிவில் சேமிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் ஒரு யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும். தனிநபர்கள் அதிக பட்சமாக 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். அறக்கட்டளைகள் போன்றவை 20 கிலோ வரை முத லீடு செய்ய முடியும். நடப்பு நிதியாண்டில் தங்க பத்திரங்களை ஆறு கட்டங்களாக , ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளியிட இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

நாட்டின் ஜிடிபி 20.1% அதிகரிப்பு – முன்னேற்ற பாதையில் இந்திய பொருளாதாரம்!

தங்க பத்திர வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக நாள்களில் இருந்த, 999 கேரட் சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியைக் கொண்டு வெளியீட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆறாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, ஆகஸ்ட் 31ம், தேதியான நேற்று முதல் துவங்கி, செப்டம்பர் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இன்று நடைபெறும் பத்திர வெளியீட்டின் போது தங்கத்தின் விலை 4,732 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த திட்டத்தின் முதலீட்டுக்காலம் எட்டு ஆண்டுகள்ஆகும். இதன், இறுதி தேதியிலுள்ள மதிப்புக்கு தங்கப்பத்திரங்களை பணமாக மாற்றிக்கொள்ளலாம். ஐந்தாண்டுகள் முடிந்த பிறகும் தங்கப்பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம். தங்கப்பத்திர மதிப்பிற்கு, 2.5 சதவீத வட்டி கணக்கிட்டு, ஆறு மாதத்திற்கு ஒருமுறை முதலீட்டாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும். பணம் செலுத்தும் நபர்களுக்கு முதலில் அஞ்சலக ரசீதும், 20 நாட்களுக்கு பிறகு தங்கப்பத்திரமும் வழங்கப்படும். தங்கப்பத்திரங்களை வைத்து பணம் தேவைப்படும் போது, வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!