தமிழகத்தில் ஜூன் 20 முதல் போக்குவரத்து சேவை தொடக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஜூன் 20 முதல் போக்குவரத்து சேவை தொடக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூன் 20 முதல் போக்குவரத்து சேவை தொடக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூன் 20 முதல் போக்குவரத்து சேவை தொடக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் வருகிற ஜூன் 20ம் தேதி முதல் இயங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது எந்தெந்த ரயில்கள் இயங்கவுள்ளது என்பதற்கான விவரம் வெளியாகியுள்ளது.

ரயில் சேவை:

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பேருந்து சேவைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் ரயில் சேவை கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஒரு வருட காலமாக சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொதுமுடக்க காலத்தில் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டு வந்தது.

63.5% பேருக்கு கொரோனா எதிர்ப்பு திறன் – செரோ சர்வே தகவல்!!

மேலும் சில ரயில்கள் வெறும் பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. இதனால் ரயில்வே துறைக்கு நிதிச்சுமை ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சில வழித்தடங்களில் இங்கும் சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்து வருகிறது. தற்போது அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்கள் மீண்டும் வருகிற 20ம் தேதி முதல் இயங்க உள்ளது. தற்போது எந்தெந்த ரயில்கள் இயங்கவுள்ளது என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது.

10 சிறப்பு ரயில்கள்:

  • 06865 சென்னை எக்மோர் – தஞ்சாவூர் சிறப்பு ரயில் ஜூன் 20 முதல் இயங்கவுள்ளது. மறுமார்க்கத்தில் 06866 தஞ்சாவூர் – சென்னை எக்மோர் சிறப்பு ரயில் ஜூன் 21 முதல் இயங்கவுள்ளது.
  • 06101 சென்னை எக்மோர் – கொல்லம் சிறப்பு ரயில் ஜூன் 20 முதல் இயங்கவுள்ளது. மறுமார்க்கத்தில் 06102 கொல்லம் – சென்னை எக்மோர் சிறப்பு ரயில் ஜூன் 21 முதல் இயங்கவுள்ளது.
  • 02695 சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் சிறப்பு ரயில் ஜூன் 20 முதல் இயங்கவுள்ளது. மறுமார்க்கத்தில் 02696 திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூன் 21 முதல் இயங்கவுள்ளது.
  • 02639 சென்னை சென்ட்ரல் – ஆலப்புழா சிறப்பு ரயில் ஜூன் 20 முதல் இயங்கவுள்ளது. மறுமார்க்கத்தில் 02640 ஆலப்புழா – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூன் 21 முதல் இயங்கவுள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • 02671 சென்னை சென்ட்ரல் – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் ஜூன் 20 முதல் இயங்கவுள்ளது. மறுமார்க்கத்தில் 02672 மேட்டுப்பாளையம் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூன் 21 முதல் இயங்கவுள்ளது.
  • 06851 சென்னை எக்மோர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் ஜூன் 20 முதல் இயங்கவுள்ளது. மறுமார்க்கத்தில் 06852 ராமேஸ்வரம் – சென்னை எக்மோர் சிறப்பு ரயில் ஜூன் 21 முதல் இயங்கவுள்ளது.
  • 02668 கோவை – நாகர்கோவில் சிறப்பு ரயில் ஜூன் 20 முதல் இயங்கவுள்ளது. மறுமார்க்கத்தில் 02667 நாகர்கோவில் – கோவை சிறப்பு ரயில் ஜூன் 21 முதல் இயங்கவுள்ளது.
  • 06343 திருவனந்தபுரம் – மதுரை சிறப்பு ரயில் ஜூன் 20 முதல் இயங்கவுள்ளது. மறுமார்க்கத்தில் 06344 மதுரை – புனலூர் சிறப்பு ரயில் ஜூன் 21 முதல் இயங்கவுள்ளது.
  • 02653 சென்னை எக்மோர் – திருச்சி சிறப்பு ரயில் ஜூன் 20 முதல் இயங்கவுள்ளது. மறுமார்க்கத்தில் 02654 திருச்சி – சென்னை எக்மோர் சிறப்பு ரயில் ஜூன் 21 முதல் இயங்கவுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!