ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

0
ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு - தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு - தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் பொது போக்குவரத்து சேவைகளில் ஒன்றான ரயில் போக்குவரத்து பொது மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து தெற்கு ரயில்வே ரயில் பயணத்தில் பயணிகள் செய்யும் தவறுகளுக்கான அபராதம் மற்றும் தண்டனை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பயணிகள் கவனத்திற்கு

இந்தியாவில் பொது போக்குவரத்து சேவையில் சாதாரண மக்கள் பயணிக்க மிகவும் குறைவான விலையில் ரயில்வே வாரியம் செயல்பட்டு வருகிறது. இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொள்கிறார்கள். இதில் பயணிகள் மேற்கொள்ளும் சிறு தவறுகளுக்கு மிகப்பெரிய தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். மேலும் இது போன்ற சிறு தவறுதலுக்கு பயணிகளுக்கு விதிக்கப்படும் அபராதம், தண்டனை போன்றவற்றின் விவரங்களை தெற்கு ரயில்வே தற்போது வெளியிட்டுள்ளது. இதனை கட்டாயமாக பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – ஒத்திவைக்கபட்ட கலந்தாய்வு! மீண்டும் நடத்த கோரிக்கை!

இதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, ரயிலில் பயணிகள் டிக்கெட் அல்லது பாஸ் இல்லாமல் பயணம் செய்தால் ரயில்வே சட்டம் பிரிவு 138ன் கீழ் பயணித்த தூரம் அல்லது ரயில் நிலையத்திலிருந்து எவ்வளவு கட்டணமோ வசூலிக்கப்படும் என்றும் இது குறைந்தபட்சமாக ரூ.250 ரூபாயாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரயில் பெட்டிகளில் உள்ள அலாரம் சங்கிலியை இழுக்கும் பயணிகளுக்கு ரயில்வே சட்டம் பிரிவு 141ன் கீழ் 12 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இவை இரண்டும் செயல்படுத்தப்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியில் பயணம் மேற்கொண்டால் ரயில்வே சட்டம் பிரிவு 155 (அ)இன் படி 3 மாத சிறை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இவை இரண்டும் செயல்படுத்தப்படுகிறது.

மேலும்

1. ரயிலில் அத்துமீறி நுழைந்தால் ரயில்வே சட்டம் பிரிவு 147ன் படி 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இவை இரண்டும் அமல்படுத்தப்படும்.

2. இதனை தொடர்ந்து ரயிலின் மேற்கூரையில் பயணம் மேற்கொண்டால் ரயில்வே சட்டம் பிரிவு 156ன் படி 3 மாத சிறை தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் அல்லது இவை இரண்டும் செயல்படுத்தப்படுகிறது.

3. அடுத்ததாக ரயிலில் தொல்லை கொடுப்பது, குப்பை கொட்டுவது உள்ளிட்டவை செய்தால் ரயில்வே சட்டம் பிரிவு 145 (b)ன் படி தொல்லை கொடுப்பதற்கு ரூ.100 அபராதமும், குப்பை கொட்டுவது மற்றும் இவை இரண்டும் தொடர்ந்து செய்யப்பட்டால் ரூ.250 அபராதமும் அத்துடன் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

4. இதையடுத்து ரயிலில் பில் ஒட்டுதலை மேற்கொண்டால் ரயில்வே சட்ட பிரிவு 166 (b)ன் படி 6 மாத சிறை தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் அல்லது இவை இரண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.

5. ரயிலில் அங்கீகரிக்கப்படாத விற்பனை மேற்கொள்பவர்களுக்கு ரயில்வே சட்டம் பிரிவு 144ன் கீழ் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறைந்தபட்ச அபராதமாக ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.2000 வரை வசூலிக்கப்படும் அல்லது இந்த இரண்டு தண்டனையும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!