10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
கொரோனா தொற்றின் காரணமாக குறிப்பிட்ட அளவிலான பயணிகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
சிறப்பு ரயில்கள்:
2019ம் ஆண்டின் இறுதியில் கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவ தொடங்கியது. அதனை தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் விமானம், ரயில் சேவை முதலியனவும் நிறுத்தி வைக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் விளைவாக கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்தது.
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் – தமிழக சட்டப்பேரவையில் அதிரடி!
இதனால் தொற்று நிலவரத்துக்கு ஏற்ப ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. எனவே குறிப்பிட்ட அளவிலான பயணியர் ரயில்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்புகளால் வழக்கமாக இயங்க வேண்டிய விரைவு ரயில்கள் முழு அளவில் இயக்கப்படவில்லை. இருப்பினும் தேவையை கருத்தில் கொண்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு வருகிறது என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதனை தொடர்ந்து 10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சென்னை சென்ட்ரல்-கயா (02390/02389), பாருனி-எர்ணாகுளம் (02521/02522), பாடலிபுத்தூர்-யஸ்வந்த்பூர் (03251/03252), தர்பாங்கா-மைசூர் (02577/02578), முஜாபர்பூர்- யஸ்வந்த்பூர் (05228/05227) ஆகியனவற்றின் சேவை அதே நேரத்தில், அதே வழித்தடத்தில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கி உள்ளது.