ஸ்மார்ட் ரேஷன் கார்டில் ‘இந்த’ மாற்றங்களை செய்யணுமா? – எளிய வழிமுறைகள் இதோ!

0
ஸ்மார்ட் ரேஷன் கார்டில் 'இந்த' மாற்றங்களை செய்யணுமா? - எளிய வழிமுறைகள் இதோ!
ஸ்மார்ட் ரேஷன் கார்டில் 'இந்த' மாற்றங்களை செய்யணுமா? - எளிய வழிமுறைகள் இதோ!
ஸ்மார்ட் ரேஷன் கார்டில் ‘இந்த’ மாற்றங்களை செய்யணுமா? – எளிய வழிமுறைகள் இதோ!

தமிழக குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கார்டில் முக்கிய சில மாற்றங்களை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்மார்ட் கார்டு:

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும், சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வரும் நிலையில், அந்த ரேஷன் கார்டில் உள்ள தகவல்கள் அனைத்தும் கட்டாயம் உண்மையானதாக இருக்க வேண்டும். இல்லையெனில், அரசு வழங்கும் எந்த விதமான நலத்திட்டங்களையும் நாம் பெற்றுக் கொள்ள முடியாது. பொதுவாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கார்டில் ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டிய தேவைகள் இருக்கலாம்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு எப்போது? வலுக்கும் கோரிக்கை

ஆனால், இதற்காக அரசு அலுவலகங்களுக்கு அலைய நேரிடும் என்பதால், மாற்றங்களை செய்யாமல் அப்படியே பயன்படுத்தி வருவார்கள். இது போன்ற, ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம், தொலைபேசி எண்களை மாற்றுவது, குடும்ப தலைவரின் பெயரை மாற்றுவது போன்ற சேவைகளை எளிய முறையில் ஆன்லைன் மூலம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளை மக்கள் முறையாக பயன்படுத்தி தங்களுக்கு சேவையான மாற்றங்களை செய்து கொண்டு பயனடைந்து கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

பெயரை சேர்த்தல் & நீக்குவது:
  • முதலில், tnpds.gov.in என்ற தமிழக அரசின் குடும்ப வழங்கல் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் உள்ள, “ஸ்மார்ட் கார்டு சேவைகள்” என்ற பிரிவின் கீழ் உள்ள ” உறுப்பினர்களை சேர்” அல்லது ” உறுப்பினர்களை நீக்குவது” என்ற தேவையான தலைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன்பிறகு, புதிய உறுப்பினர் சேர்க்க அவரது புகைப்படத்துடன் கூடிய விவரங்களை உள்ளிட்டு, பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்களையும் பதிவிட வேண்டும்.
  • அல்லது, உறுப்பினரை நீக்குவதற்கு பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்களை உள்ளிட்டு உறுப்பினரை தேர்வு செய்து நீக்கம் செய்ய வேண்டும் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இந்த மாற்றங்கள் ஸ்மார்ட் கார்டில் பதிவு செய்யப்பட்ட உடன் உங்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.
முகவரி மாற்றம்:
  • tnpds.gov.in என்ற இணையதளத்தில் உள்ள முகவரி மாற்றம் பிரிவில் கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
  • பின்னர், மாற்றம் செய்யப்பட வேண்டிய புதிய முகவரிக்கான ஆவணங்களை சமர்ப்பித்து, முகவரி மாற்றத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
  • இதற்கான உறுதி நிலை குறித்து, உங்களது தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.
குடும்ப தலைவர்:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள, இணையதளத்தில் சென்று, அதில் உள்ள குடும்ப தலைவர் மாற்றம் என்ற விருப்பத்தை தேர்வு செய்து, அதற்கான விவரங்களை உள்ளிட்டு அந்த மாற்றத்தை செய்து கொள்ளலாம்.

தொலைபேசி எண் மாற்றம்:
  • ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ள தங்களது தொலைபேசி எண்களை மாற்றம் செய்வதற்கு, பயனர்கள் தங்கள் தாலுகா அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடம், இதற்கான மனுவை பெற்று தேவையான விவரங்களை பூர்த்தி செய்து மாற்றம் செய்து கொள்ளலாம்.
  • இதேபோல், 1967 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு அழைத்து, ரேஷன் கார்டில் மொபைல் எண்களை மாற்றம் செய்வதற்கான செயல்முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!