FD கணக்கில் 7% வட்டி வழங்கும் சிறிய வங்கிகள் – முழு விவரம் இதோ!

0
FD கணக்கில் 7% வட்டி வழங்கும் சிறிய வங்கிகள் - முழு விவரம் இதோ!
FD கணக்கில் 7% வட்டி வழங்கும் சிறிய வங்கிகள் - முழு விவரம் இதோ!
FD கணக்கில் 7% வட்டி வழங்கும் சிறிய வங்கிகள் – முழு விவரம் இதோ!

ஒரு நிலையான வைப்புத்தொகை அல்லது சேமிப்புக் கணக்கில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்புகளை, அதாவது 7% அளவுக்கு வட்டியை அளிக்கும் சில வங்கிகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் கிடைக்கும் வருமானம் SBI மற்றும் HDFC வங்கியின் வட்டிகளை விட அதிகமாகும்.

FD கணக்கு

ஒரு நிலையான வைப்புத்தொகை அல்லது சேமிப்புக் கணக்கில் முதலீடு செய்ய விரும்பினால் FD கணக்கைத் திறக்க சரியான வங்கியைத் தேர்ந்தெடுப்பது ஒரு முக்கியமான பணியாகும். பொதுவாக FD கணக்கில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் குறிப்பிட்ட வங்கியின் வட்டி வீதத்தை அறிவது கட்டாயமாகும். அதாவது அதிக வட்டி வீதத்தை வழங்கும் வங்கிகளில் நாம் கணக்கு வைத்திருக்கும் பட்சத்தில் சில சிறப்பான நன்மைகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பாக பேங்க் பஜார் அளிக்கும் தரவுகளின்படி, புதிய மற்றும் சிறிய தனியார் வங்கிகள் பல பெரிய வங்கிகளை விட அதிகளவு வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? அமைச்சர் விளக்கம்!

அந்த வகையில் சிறு நிதி வங்கிகளான ஏயூ ஸ்மால் பைனான்ஸ் வங்கி, ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி மற்றும் உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஆகியவை 7% வரை வட்டி விகிதங்களை வழங்குவதாக தரவுகள் தெரிவிக்கிறது. தொடர்ந்து DCB வங்கி போன்ற சில வங்கிகள் 6.75% வட்டி வீதத்தையும், RBL வங்கி 6.25% வட்டியையும், பந்தன் வங்கி 6% வட்டியையும் அளிக்கிறது. இவ்வங்கியில் வழங்கப்படும் வட்டி வீதங்கள் HDFC, SBI மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளை விட அதிகமாகும்.

TN Job “FB  Group” Join Now

அதாவது இந்த 3 வங்கிகளிலும் சுமார் 3 லிருந்து 3.5% வரை வட்டி விகிதங்கள் கொடுக்கப்படுகிறது. மேலும் கோடக் மஹிந்திரா வங்கி 4% வட்டி விகிதமும், SBI வங்கி 2.70% வட்டியும், பாங்க் ஆப் பரோடா 3.20% வட்டியும் அளிக்கிறது. FD கணக்குகளை துவங்க ஒரு பெரிய, பொதுத்துறை வங்கியில் குறைந்தபட்ச இருப்பு ரூ.500 வரையும், சிறு நிதி வங்கிகளை பொருத்தளவு குறைந்தபட்ச இருப்பு ரூ.2,000 ஆக இருக்கிறது. எனினும் சேமிப்பு வங்கி கணக்கை (FD) துவங்கும் போது, வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கியின் விரிந்த சேவைகள் மற்றும் நன்மதிப்பை கணக்கில் கொண்டு தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!