ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றும் எளிய வழிமுறைகள் – முழு விபரம்!

0
ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றும் எளிய வழிமுறைகள் - முழு விபரம்!
ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றும் எளிய வழிமுறைகள் - முழு விபரம்!
ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றும் எளிய வழிமுறைகள் – முழு விபரம்!

UIDAI வழங்கியுள்ள ஆதார் அட்டையில் பல விவரங்கள் ஆன்லைனில் மாற்றம் செய்ய அனுமதி உள்ள நிலையில், புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

புகைப்பட மாற்றம்:

இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை அவசிய சான்றாகும். அடையாள ஆணையத்தால் 12 இலக்க தனித்துவமான எண்ணுடன் வழங்கப்பட்டிருக்கும். ஆதார் அட்டை மூலம் நமது மத்திய அரசு வழங்கும் மானியங்கள், பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா, பிரதம் மந்திரி ஜன தன் யோஜனா போன்ற நலத்திட்டங்களுக்கான பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டையில் நமது அனைத்து தரவுகளும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

செப். 8 முதல் OLA Electric Scooter விநியோகம் துவக்கம் – விலை உள்ளிட்ட விவரங்கள் வெளியீடு!

அவற்றில் ஏதவாது ஒரு தரவு தவறாக பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தால் அதனை நாம் உடனடியாக மாற்றி சரியான தகவலை பதிவு செய்ய வேண்டும். இதற்காக ஆன்லைன் வழிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. ஆதாரில் உள்ள புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கும் வழி உள்ளது. ஏனெனில் ஆதாரில் உள்ள புகைப்படத்தை வைத்து ஒருவரை அடையாளம் காணுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இந்த மாற்றத்திற்கு அருகிலுள்ள ஆதார் பதிவு மையம் அல்லது ஆதார் சேவா கேந்திராவுக்கு நேரில் செல்ல வேண்டும்.

ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்றுவதற்கான வழிமுறைகள்:
  • முதலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஆதார் பதிவு படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பதிவு செய்து, படிவத்தை ஆதார் பதிவு செயலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஆதார் மைய அதிகாரி உங்கள் விவரங்களை பயோமெட்ரிக் விவரங்களுடன் சரிபார்த்து உறுதிப்படுத்துவார்.

TN Job “FB  Group” Join Now

  • பின்னர், ஆதார் பதிவு மையம் அல்லது ஆதார் சேவா கேந்திரா ஊழியர்களால் உங்கள் புதிய புகைப்படம் எடுக்கப்படும்.
  • புகைப்படத்தை மாற்றும் சேவைக்காக நீங்கள் ரூ.25 மற்றும் அதனுடன் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.
  • ஆதார் மைய அதிகாரி ஆதார் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணுடன் உள்ள ஒப்புதல் சீட்டை உங்களிடம் தருவார்.
  • UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் ஆதார் புதுப்பிப்பு நிலையை சரிபார்க்க URN ஐப் பயன்படுத்தலாம்.
  • உங்கள் ஆதார் அட்டையில் புதிய புகைப்படத்தை புதுப்பித்த பின்னர், புதிய நகலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!