GooglePay, PhonePay ஆகியவற்றிற்கு சேவை கட்டணம் வசூல்? ரிசர்வ் வங்கி திட்டம்!

5
GooglePay, PhonePay ஆகியவற்றிற்கு சேவை கட்டணம் வசூல்? ரிசர்வ் வங்கி திட்டம்!
GooglePay, PhonePay ஆகியவற்றிற்கு சேவை கட்டணம் வசூல்? ரிசர்வ் வங்கி திட்டம்!

இந்தியாவில் அனைத்து பயன்பாடுகளும் கணினி மயமாக்கப்படுவதால் வங்கிகளில் பணம் எடுக்க காத்திருக்காமல் இருந்த இடத்திலே ஒரு சில நிமிடங்களில் யுபிஐ சேவை மூலம் பணம் அனுப்ப முடிகிறது. தற்போது இந்த டிஜிட்டல் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி

இந்தியாவில் அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை தற்போது ஸ்மார்ட் போன் வைத்துள்ள அனைவரும் பயன்படுத்துகின்றோம். இதனால் மணி கணக்கில் வங்கிகளில் காத்திருந்து பணத்தை எடுக்கவோ அல்லது பணத்தை முதலீடு செய்யவோ வேண்டிய அவசியமில்லை. இதனால் கால தாமதம் ஏற்படுவதும் குறைகிறது. அத்துடன் டீக் கடை முதல் தங்க நகைக்கடை, ஜவுளிக்கடை, உணவகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆன்லைன் பணபரிவர்த்தனைகளையே மேற்கொள்கிறோம்.

பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அமைச்சர் தகவல்!

மேலும் வங்கி நெட்பேங்கினை விட யுபிஐ தளங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். யுபிஐ தளங்களான கூகுள் பே, போன் பே, பேடிஎம், பிம் யூபிஐ உள்ளிட்டவைகளை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் நாட்டில் கொரோனா காரணமாக பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி பண வீக்கத்தை கட்டுப்படுத்த தனது ரெப்போ வட்டி விகிதத்தை 2 முறை அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து மற்றொரு திட்டத்தையும் ரிசர்வ் வங்கி கொண்டு வர உள்ளதாக திட்டமிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது நாட்டில் பெரும்பாலானோர் பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் ஆன்லைன் டிஜிட்டல் சேவைகளான கூகுள் பே, போன்பே, பேடிஎம், பிம் யூபிஐ ஆகியவற்றிற்கு கட்டணத்தை வசூலிக்க உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான சாத்திய கூறுகளை பற்றி ஆராய்ந்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மின்னணு நிதி பரிமாற்றத்தின் உள்கட்டமைப்பிற்கான முதலீட்டை மீட்டெடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

  1. இதற்கு சேவை கட்டணம் வசூலித்தால் மீண்டும் மக்கள் பழைய முறைக்கு தான் மாறுவார்கள்.இதனால் கருப்பு பணம் அதிகரிக்கும்.UPI பயன்படுத்துவதால் வணிகர்களுடைய பணம் வங்கி கணக்குக்கு செல்லும் இதனால் அவர்கள் வரவு செலவுகளை வங்கி கண்காணிக்கும்.

  2. நடுத்தர மக்கள் தான்
    இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள்
    அவர்களை வாழ விடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!