டிஆர்பியில் விஜய் டிவியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை தக்கவைத்த சன் டிவி – முழு பட்டியல் இதோ!!

0
டிஆர்பியில் விஜய் டிவியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை தக்கவைத்த சன் டிவி – முழு பட்டியல் இதோ!!

இந்த வார டிஆர்பி ரேட்டிங்கின் படி முதல் 5 இடத்தையும் சன் தொலைக்காட்சி சீரியல்களே பிடித்து விஜய் தொலைக்காட்சியை பின்னுக்கு தள்ளியுள்ளது.

சீரியல்:

தமிழகத்தில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியானாலும் பொதுமக்கள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தான் விரும்பிப் பார்த்து வருகின்றனர். அந்த வகையில், டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஆறு இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் குறித்த விவரங்களை காணலாம். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்கும் ஆசை சீரியல் ஆறாம் இடத்தை பிடித்திருக்கிறது. அடுத்ததாக, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் ஐந்தாம் இடத்தையும், கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல் இடத்தை பிடித்து வந்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

அடுத்ததாக, அண்ணன் தங்கையின் பாச போராட்டத்தை வெளிப்படுத்தும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வானத்தைப்போல சீரியல் மூன்றாம் இடத்தையும், எழில் மீது காதலை வெளிப்படுத்தும் தருணத்தில் விபத்து ஏற்பட்டு மூச்சுப் பேச்சு இல்லாமல் இருக்கும் கயலின் அழகிய தருணங்களை காட்டும் கயல் சீரியல் இரண்டாவது இடத்தையும், தற்போது சன் தொலைக்காட்சியில் புத்தம் புதியதாக ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் முதல் இடத்தையும் தக்க வைத்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!