‘ராஜா ராணி’ ஆலியா – சஞ்சீவ் முதல், ‘செம்பருத்தி’ ஷபானா – ஆர்யன் வரை | சீரியல் பிரபலங்களின் லவ் ஸ்டோரி!

0
'ராஜா ராணி' ஆலியா - சஞ்சீவ் முதல், 'செம்பருத்தி' ஷபானா - ஆர்யன் வரை | சீரியல் பிரபலங்களின் லவ் ஸ்டோரி!
'ராஜா ராணி' ஆலியா - சஞ்சீவ் முதல், 'செம்பருத்தி' ஷபானா - ஆர்யன் வரை | சீரியல் பிரபலங்களின் லவ் ஸ்டோரி!
‘ராஜா ராணி’ ஆலியா – சஞ்சீவ் முதல், ‘செம்பருத்தி’ ஷபானா – ஆர்யன் வரை | சீரியல் பிரபலங்களின் லவ் ஸ்டோரி!

தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் மற்றும் ரியாலியட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் முக்கிய பிரபலங்களாக வலம் வரும் நடிகர், நடிகைகளின் லவ் ஸ்டோரி மற்றும் திருமணம் குறித்த சில விஷயங்களை இந்த காதலர் தின சிறப்பு பதிவில் காணலாம்.

லவ் ஸ்டோரி

பொதுவாக நம்மில் ஒவ்வொருவருக்கும் காதலின் அர்த்தங்களும் அதன் மீதான பார்வையும் வேறுபட்டிருக்கும். குறிப்பாக வாழ்க்கையின் ஒவ்வொரு பரிணாமத்திலும், இந்த காதல் அன்பை பரிமாறுவது, விட்டுக் கொடுப்பது, தியாகம் செய்வது, பகிர்ந்து கொள்வது என்று பல்வேறு பொருள்களில் மாறுபடும். இதில் காதலை கொண்டாட்டம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதிலும் காதலர் தினம் என்று சொன்னால் கொண்டாட்டத்தை பற்றி கேட்கவே தேவையில்லை. அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்போது, நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஏதாவதொரு பகுதியில் காதலை கடந்து வந்திருப்போம். அதாவது ஒரு சிலருக்கு காதல் பற்றிய அனுபவம் இருந்திருக்கலாம், ஒரு சிலர் காதலில் இருக்கலாம் அல்லது காதல் இப்படி தான் என்று சொல்லி கேட்டிருக்கலாம். அது போல, நாம் எல்லாரும் பார்த்து வியந்திருக்கும் பிரபலங்களின் காதல் கதையை தெரிந்து கொள்ள நம்மிடம் எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கும். அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் அல்லது நிகழ்ச்சிகள் மூலம் மக்களை மகிழ்வித்து வரும் சில காதல் ஜோடிகளின் ரியல் காதல் கதைகளை இப்பதிவில் காண்போம்.

இதில் முதலாவதாக இடம்பிடிப்பது விஜய் டிவி ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் நிஜ ஜோடியான ஆல்யா – சஞ்சீவ் தான். சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி, காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிகள் என்றும் இளமையான காதல் ஜோடியாக வலம் வந்துகொண்டுள்ளனர். இவர்களின் காதலுக்கு பரிசாக ஐலா என்ற பெண் குழந்தை பிறந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. அடுத்த படியாக, ‘திருமணம்’ சீரியல் மூலம் ரசிகர்களின் பேவரைட் ஆன ஷ்ரேயா – சித்து ஜோடி, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறது.

தொடர்ந்து விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலின் நடிகை நக்ஷத்ரா – ராகவ் ஜோடி சமீபத்தில் மிக பிரமாண்டமான முறையில் திருமணத்தை முடித்திருந்தது. அடுத்து, 2k கிட்ஸ்களின் பேவரைட் ஆன யூடியூபர் ஹரிஜா கடந்த ஆண்டில் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொள்ள, இவர்கள் இருவரும் தங்கள் குழந்தையுடன் இன்று காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். விஜய் டிவி ‘தேன்மொழி’ சீரியலில் ஸ்கூல் பெண்ணாக நடித்த அஞ்சலி, கணவர் பிரபாகரன் இருவரும் ரியாலிட்டி ஷோ மூலம் அறிமுகமாகி, காதலில் விழுந்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த ஜோடி தற்போது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனது. அடுத்ததாக, மலையாள ‘பிக் பாஸ்’ மூலம் காதலில் விழுந்த பியர்லி மேனி – ஸ்ரீனிஷ் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கும் நிலையில், சினிமாவில் பிசியாக நடித்து வருகிறது இந்த நட்சத்திர தம்பதி. விஜய் டிவி ‘வேலைக்காரன்’ சீரியலில் நடித்து வரும் பிரபல மாடல் சத்யா – பாடகி NSK ரம்யா இருவரும் நண்பர்கள் மூலம் சந்தித்து காதலில் விழ, பிறகு திருமணமும் செய்து கொண்டனர். இவர்களது காதல் கதை, திருமணம் இரண்டும் சற்றே வித்தியாசமானது தான்.

‘பாக்கியலட்சுமி’ எழில் விஜே விஷாலுக்கு ரசிகர்களின் சர்பிரைஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ!

தொடர்ந்து செய்தி வாசிப்பாளரும், சீரியல் நடிகையுமான அபி நவ்யா மற்றும் நடிகர் தீபக் இருவரும் காதலித்து, சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டனர். அடுத்ததாக சின்னத்திரை உலகையே திரும்பி பார்க்க வைத்த நட்சத்திர காதல் ஜோடியான ‘செம்பருத்தி’ ஷபானா – ‘பாக்கியலட்சுமி’ ஆர்யன் இருவரும் கடந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதல் திருமணம் தான் சமூக வலைதளங்களில் அன்றைய நாளுக்கான ஹாட் டாப்பிக் ஆக இருந்தது. திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களது சீரியல்கள் மூலம் மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here