தமிழகத்தில் செப்.08 தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் செப்.08 தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் செப்.08 தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் செப்.08 தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கேரள மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

கேரளாவில் ஆவணி திருவோண நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஓணம் திருவிழா அறுவடைத் திருவிழாவாகவும் கேரளாவில் கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் இப்பண்டிகை கொண்டாடபடுகிறது. இந்த விழா காலத்தில் கேரளாவில் படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் போன்றவைகள் நடைபெறும். இந்த திருநாளில் மகாபலி மன்னரை வரவேற்கும் விதமாக அனைவரது வீட்டு வாசலிலும் பூக்களால் ஆன வண்ண கோலங்கள் போட்டபடும்.

TNPSC குரூப் 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Result தாமதத்திற்கான காரணம் இதோ!

உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அன்றைய தினம் பாரம்பரிய உடை அணிந்தும் பல வகையான உணவுகளை உண்டும் மக்கள் மகிழ்வர். கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக ஓணம் பண்டிகை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது.இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ஓணம் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் செப்டம்பர் 6 ஆம் தேதி கனகக்குன்னு அரண்மனை மைதானத்தில் கேரள அரசு விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிலையில் கேரள மாநில மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய கோயம்புத்தூரில் செப்டம்பர் 8ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு அம் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வண்ணம் செப்டம்பர் 17ம் தேதி வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளன்று கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!