தமிழகத்தில் இன்று மட்டும் 1,653 பேருக்கு கொரோனா உறுதி; 22 பேர் பலி – சுகாதாரத்துறை தகவல்!
தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 1,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 22 பேர் இன்று தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் நாளுக்கு நாள் படிப்படியாக கடந்த மாதம் முதல் குறைந்து வந்தது. இதனால் அரசு பல தளர்வுகளை அளித்து வந்த போதிலும், அக்டோபர் 31ம் தேதி வரை கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறையினர் மாநிலத்தில் தொற்று பற்றிய முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று 1,653 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 26,43,683 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,310 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும் 16,893 பேர் தொற்று பாதிப்பிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
TN Job “FB
Group” Join Now
இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,581 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,91,480 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,56,175 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 4,51,44,520 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 204 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.