புதுச்சேரியில் பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான தேர்வானது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 10ம் வகுப்பு , 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. தற்போது தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 6 ம் தேதி திறக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TET தேர்வு 2024 – முதல் முறையிலேயே வெற்றி பெற வேண்டுமா?
தற்போது புதுச்சேரியிலும் பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு பள்ளி திறந்தவுடன் பாட நூல், நோட்டு, சீருடை துணி மற்றும் தையல் கூலி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு தேதி பெற்றோர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.