தமிழகத்தில் ஜனவரி மாதம் பள்ளிகள் திறப்பு – கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு!!

3
தமிழகத்தில் ஜனவரி மாதம் பள்ளிகள் திறப்பு - கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு!!
தமிழகத்தில் ஜனவரி மாதம் பள்ளிகள் திறப்பு - கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு!!
தமிழகத்தில் ஜனவரி மாதம் பள்ளிகள் திறப்பு – கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு!!

கேரளா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்திலும் இம்மாதத்திற்குள் பள்ளிகளை திறக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு உள்ளன. இதை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்களுக்கு மேல் நிறைவடைந்து விட்ட போதிலும் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

பணியின் போது ஊனம் ஏற்பட்டால் அரசு ஊழியர்களுக்கு இழப்பீடு – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

இம்முறை அரையாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். மேலும் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் முதல்வருடன் ஆலோசித்து தேர்வு அட்டவணை வெளியிடப்படும் எனவும் அமைச்சர் கூறி உள்ளார். இதற்கிடையில் மாணவர்கள் தொடர்ந்து நீண்ட நாட்களாக ஆன்லைனில் பாடங்களை பயின்று வருவதால் பல்வேறு உடல்நல சிக்கல்கள் ஏற்படுகிறது.

அரசுப்பள்ளி கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

மேலும் நீண்ட நேரமாக டிவி, மொபைல் போன்றவற்றை பார்ப்பதால் கண் வலி, தலைவலி மற்றும் உடற்சோர்வு போன்றவை ஏற்படுகிறது. பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறி இருந்த நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தில் பகுதி நேரமாக பள்ளிகளை திறக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!