ஜூலை 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? ஆன்லைன் வகுப்புகள்!

1
ஜூலை 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? ஆன்லைன் வகுப்புகள்!
ஜூலை 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? ஆன்லைன் வகுப்புகள்!
ஜூலை 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? ஆன்லைன் வகுப்புகள்!

தற்போதுள்ள கொரோனா சூழலை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தையும் மீண்டும் திறக்க வேண்டாம் என தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஜூலை 1 முதல் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகள்

கொரோனா 2 ஆம் அலை பரவல் நாடு முழுவதும் குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என்று தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும், ஜூலை 1 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை துவங்குவதாக அறிவித்துள்ளது. முன்னதாக தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவங்கும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சேவை கட்டணம் அதிகரிப்பு!

இதனுடன் மாநில கல்வி அமைச்சர் பி. சபிதா இந்திரா ரெட்டி கூறுகையில், ‘கொரோனா நோய் தொற்றை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் தற்போதைக்கு துவங்கும். அதன்படி, முதலாம் வகுப்பு மாணவர்கள் முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். மேலும் கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு, அரசு முன்னமே அறிவித்துள்ள படி பள்ளி கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்குமாறு தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இதற்கிடையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை தெலுங்கானா அரசு நேற்று (ஜூன் 28) வெளியிட்டது. முன்னதாக தெலுங்கானாவை சேர்ந்த சுமார் 4.7 லட்சம் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தது. இது தவிர கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அல்லது DOST ஐப் பொறுத்தளவு, புதிய வகுப்புகள் விரைவில் துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாணவர்களுக்கான புதிய ஆன்லைன் பதிவுகள் dost.cgg.gov.in இணையதளம் வழியாக நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. In the name of neet many schools are making big money. Three is no proper system to check such people in the state.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!