SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வங்கி மோசடிகளைத் தவிர்க்க வழிமுறைகள் வெளியீடு!

0
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - வங்கி மோசடிகளைத் தவிர்க்க வழிமுறைகள் வெளியீடு!
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - வங்கி மோசடிகளைத் தவிர்க்க வழிமுறைகள் வெளியீடு!
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வங்கி மோசடிகளைத் தவிர்க்க வழிமுறைகள் வெளியீடு!

பொதுவாக வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஆன்லைன் நெட் பேங்கிங் சேவைகள் மூலம் அதிகளவு மோசடிகள் நிகழ்ந்து வருவதால் SBI வங்கி தனது வாடிக்கையாளர்களை இவ்வகை மோசடிகளில் இருந்து பாதுகாக்க சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

மோசடி தவிர்ப்பு

வங்கி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்று பணத்தை திருடுவதை நோக்கமாகக் கொண்ட ஆன்லைன் வங்கி அல்லது இணையதள வங்கி மோசடிகளைத் தவிர்ப்பதற்காக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI சில வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது. அந்த வகையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி (SBI), கடவுச்சொற்களை அடிக்கடி புதுப்பிப்பது வங்கி மோசடிகளை தவிர்க்க ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கை என தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அமலுக்கு வருகிறது ஓபிசி பட்டியல் சட்டம் – விவரங்கள் உள்ளே!

மேலும் இது தொடர்பான சில தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வங்கி நிர்வாகம் சுயவிவர கடவுச்சொற்களை ஆன்லைனில் புதுப்பிக்கவும், பாதுகாப்பான வங்கி பரிவர்த்தனைகளை நடத்துவதற்கும் சில குறிப்புகளை பகிர்ந்துள்ளது. மேலும் இவ்வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘SBI பயனர்களின் சுயவிவர கடவுச்சொல் உள்நுழைவு கடவுச்சொல்லிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும்.

அதாவது ஒரு கடவுச்சொல் எண்கள், எழுத்துக்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்கள் அல்லது படங்களின் கலவையாக இருக்க வேண்டும். அந்த வகையில் ஒரு சுயவிவர கடவுச்சொல்லை அமைத்துள்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்’ என குறிப்பிட்டுள்ளது. இதை பயன்படுத்தி கடவுச்சொல்லை உருவாக்க சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி,

  • கடவுச்சொற்களைப் பகிர்வது ஆபத்து.
  • அதனால் உங்கள் கடவுச்சொல்லை யாரிடமும் வெளியிடாதீர்கள்.
  • பரிவர்த்தனையின் போது நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் இடத்தில் மட்டுமே உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • உங்கள் தனிப்பட்ட தகவலை வழங்குவதற்கு முன் மோசடி இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  • மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்யும் போது பாப்-அப் என்று தோன்றும் எந்தப் பக்கத்திலும் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொற்களை வழங்காதீர்கள்.

TN Job “FB  Group” Join Now

  • பக்கம் திறப்பது உண்மையான வங்கி சேவை தான் என்பதை உறுதிசெய்த பிறகு முகவரி பட்டியில் உள்ள URL ஐ தட்டச்சு செய்வதன் மூலம் சேவையில் உள்நுழைவது ஒரு சிறந்த நடைமுறையாகும்.
  • எந்தவொரு ஒரு கோப்பிலும் கடவுச்சொற்களை சேமிக்க வேண்டாம்.
  • குறைந்தது 90 நாட்களுக்கு ஒரு முறையாவது கடவுச்சொற்களை மாற்றவும்.
  • கடவுச்சொல் குறைந்தது ஐந்து வெவ்வேறு எழுத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும்.
  • ஏற்றுக்கொள்ளக்கூடிய கடவுச்சொல் பெரிய எழுத்து, சிறிய எழுத்து, இலக்கங்கள், நிறுத்தற்குறிகள் கொண்டிருக்க வேண்டும்.
  • அகர வரிசை எழுத்துக்கள், ஒரு இலக்க வரிசை எழுத்துக்களை கொண்டிருக்கக்கூடாது.
  • கடவுச்சொல் மற்றவர்கள் யூகிக்க கூடிய அளவுக்கு இருக்க கூடாது.
கடவுச்சொற்கள் பின்வருவனவாறு இருக்கக்கூடாது:
  • அகராதி வார்த்தைகள், ஒரு நபரின் பெயர், பொருள், இடம், தொலைபேசி எண் அல்லது ஒரு வாகன எண்களை கடவுச்சொல்லாக வைக்க கூடாது.
  • கணினியை உங்கள் கடவுச்சொல்லை நினைவில் கொள்ள விடாதீர்கள்.
  • முடிந்தவரை ஒரு முக்கியமான சேவையை அணுக நம்பமுடியாத அமைப்பைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!