SBI Clerk/ Junior Associates தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

0
SBI Clerk/ Junior Associates தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா Clerk/ Junior Associates பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI Clerk தேர்வு தேதி:

Junior Associates எனப்படும் Clerk பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியானது செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, இந்தியா முழுவதும் உள்ள 5486 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு பல லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து உள்ளனர். நாடு முழுவதும் ஸ்டேட் பேங்க் (SBI) கிளார்க் பதவிக்கான முதல் கட்ட தேர்வானது நவம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நுழைவுச்சீட்டில் தேர்வு தேதி பற்றிய முழு விவரங்களும் இடம் பெற்றிருக்கும்.

இதற்கான தேர்வு நுழைவுச்சீட்டை விண்ணப்பித்தவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 30 – 10 – 2022 முதல் 25 – 11 – 2022 க்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI Clerk தேர்வு நுழைவுச்சீட்டு 2022 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://sbi.co.in/web/careers/current-openings க்குச் செல்லவும்.
  • விண்ணப்பதாரர்கள் SBI Clerk Admit Card என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்
  • விண்ணப்பதாரர்கள் Login என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
  • பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் தேர்வு நுழைவுச்சீட்டு இறுதியாக காண்பிக்கப்படும். அதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download SBI Clerk Prelims Admit Card 2022

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!