நாகசைதன்யாவுடன் விவாகரத்திற்கு பிறகு சமந்தா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் ஷாக்!

0
நாகசைதன்யாவுடன் விவாகரத்திற்கு பிறகு சமந்தா வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் ஷாக்!
நாகசைதன்யாவுடன் விவாகரத்திற்கு பிறகு சமந்தா வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் ஷாக்!
நாகசைதன்யாவுடன் விவாகரத்திற்கு பிறகு சமந்தா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் ஷாக்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உடற்பயிற்சி கூடத்தில் விளையாடிய ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

நடிகை சமந்தா:

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகி நடித்து வரும் சமந்தா மிக குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தார். இவர் கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாக அர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தனர். அவ்வப்போது தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்ந்தனர்.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபியின் நடிப்பு – வைரலாகும் வீடியோ! விமர்சிக்கும் ரசிகர்கள்!

இந்த நிலையில் இருவரும் திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்தனர். இந்த செய்தி திரை உலகினருக்கும், அவர்களின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் விவாகரத்திற்கு பிறகு நடிகை சமந்தா உடற்பயிற்சி கூடத்தில் குடும்பத்தினருடன் கயிறு இழுத்து விளையாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விளையாட்டு வீடியோவை சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் ஷில்பா ரெட்டி முதலில் வெளியிட்டார்.

தனத்திற்கு உதவிய கண்ணனை மறந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – ரசிகர்கள் கொந்தளிப்பு!

அதன் பிறகு சமந்தா அந்த வீடியோவை பதிவிட்டு அதனுடன் ‘சுய குறிப்பு – கிரேசியான, கடுமையான போட்டி கொடுக்க கூடிய குடும்பத்துடன் மோதாதீர்கள், நீங்கள் காயப்படுவீர்கள். நீங்கள் வலியை உணர்வீர்கள்’ என பதிவிட்டுள்ளார். இதற்கு நடிகை சம்யுக்தா ஹெக்டே, ‘இது மிகவும் வேடிக்கையாக இருக்கும்’ என கமெண்ட் செய்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!