விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபியின் நடிப்பு – வைரலாகும் வீடியோ! விமர்சிக்கும் ரசிகர்கள்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் கோபியின் நடிப்பு - வைரலாகும் வீடியோ! விமர்சிக்கும் ரசிகர்கள்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் கோபியின் நடிப்பு - வைரலாகும் வீடியோ! விமர்சிக்கும் ரசிகர்கள்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபியின் நடிப்பு – வைரலாகும் வீடியோ! விமர்சிக்கும் ரசிகர்கள்!

இன்றைய ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகாவுடன் பிக்னிக் செல்ல இருக்கும் இனியாவை அவரது வீட்டில் விடுவதற்காக கோபி நடத்தும் கலாட்டா குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே விமர்சனங்களை பெற்று வருகிறது.

பாக்கியலட்சுமி ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இன்றைய நாளுக்கான எபிசோடு சில கலாட்டாக்களுடன் வெளியாகியுள்ளது. அதாவது இனியா, ராதிகாவுடன் பிக்னிக் செல்ல வேண்டும் என கூற ராதிகா என்ற பெயரை கேட்டதும் கோபியின் இதயமே வெடித்து விடும் போல் இருக்கிறது. எங்கே, தான் பாக்கியாவிடம் மாட்டிக்கொள்வோமோ என பயந்து விடுகிறார் கோபி. இது ஒரு பக்கம் இருந்தாலும், இனியாவை ராதிகாவுடன் அனுப்ப மறுக்கும் கோபி அதற்கு ஏகப்பட்ட காரணங்களை சொல்லுகிறார்.

தனத்திற்கு உதவிய கண்ணனை மறந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – ரசிகர்கள் கொந்தளிப்பு!

ஆனால் ராதிகாவுடன் இனியாவை அனுப்புவதில் பாக்கியலட்சுமி உட்பட வீட்டில் உள்ள மற்ற எல்லாரும் ஒப்புக்கொள்கின்றனர். இதனால் வேறு வழியே இல்லாமல் கோபியும் அதற்கு சம்மதித்து விடுகிறார். இது போதாது என இனியாவை அழைத்து வர ராதிகா வருவதாக சொல்ல, கோபிக்கு மீண்டும் ஒரு பயம் தொற்றிக்கொள்கிறது. இந்த பயம் இதோடு முடியவில்லை. குறிப்பாக இன்றைய முழு எபிசோடிலும் கோபிக்கு வாழ்வா, சாவா போராட்டம் தான். ஏனென்றால் இனியாவை ராதிகாவின் வீட்டில் கொண்டு போய் விட சொல்லி அனைவரும் சொல்ல தனக்கு வேலை இருப்பதாக கூறி மழுப்புகிறார் கோபி.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 3வது சீசன் – விரைவில் தொடக்கம்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

பிறகு போகும் வழியில் இனியாவை இறக்கி விட்டு போ என கோபியின் அம்மா சொல்ல, எனக்கு தெரியாத பெண்களிடம் எல்லாம் நான் பேச மாட்டேன் என பதில் கூறுகிறார். அப்போது கோபியின் அம்மா, மற்ற பெண்களிடம் பேச கோபி எப்படி கூச்சப்படுகிறான் என சொல்ல என்ன செய்வது என தெரியாமல் திருதிருவென முழிக்கிறார் கோபி. இப்படி வெளியாகி இருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் புதிய ப்ரோமோவிற்கு, இது உலக மகா நடிப்புடா சாமி, கலியுக ராமனாக மாறிய கோபி, வேற லெவல் நடிப்பு பிரதர் என ரசிகர்கள் தங்களது கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!