ஆகஸ்ட் 1 முதல் ஞாயிற்றுக் கிழமையும் மாத சம்பளம் கிடைக்கும் – 5 முக்கிய மாற்றங்கள்!

0
ஆகஸ்ட் 1 முதல் ஞாயிற்றுக் கிழமையும் மாத சம்பளம் கிடைக்கும் - 5 முக்கிய மாற்றங்கள்!
ஆகஸ்ட் 1 முதல் ஞாயிற்றுக் கிழமையும் மாத சம்பளம் கிடைக்கும் - 5 முக்கிய மாற்றங்கள்!
ஆகஸ்ட் 1 முதல் ஞாயிற்றுக் கிழமையும் மாத சம்பளம் கிடைக்கும் – 5 முக்கிய மாற்றங்கள்!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிமுகப்படுத்திய விதிகள் மற்றும் வங்கிகளால் அறிமுகப்படுத்தப்படும் புதிய சேவை கட்டணங்களின் காரணமாக ஆகஸ்ட் 1ம் தேதியான நாளை முதல் 5 மாற்றங்கள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றங்கள்:

இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதம் முதல் மாற்றங்களை கொண்டு வருவதற்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிகள் அனைத்தும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இதனால் வங்கிகளும் தங்களது வங்கியின் கட்டணங்களை மாற்றி அமைத்துள்ளது. இதனால், மாதாந்திர தவணைகளை செலுத்துபவர்கள் பயனடைவார்கள். ஆனால் அடிக்கடி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் நபர்களுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் 5 மாற்றங்கள்:

தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் என்பது நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தால் இயக்கப்படும் மொத்த கட்டணம் செலுத்தும் முறையாகும். இதன் மூலம் EMI செலுத்துதல், வட்டி, சம்பளம், ஓய்வூதியம் போன்ற பல பரிவர்தனைகளுக்கு பணத்தை செலுத்த உதவுகிறது. மேலும், மின்சாரம், எரிவாயு, தொலைபேசி, நீர் கட்டணம், காப்பீடு தொகை, நிதி முதலீடு போன்றவற்றையும் செய்ய உதவுகிறது. இது ஆகஸ்ட் 1 முதல் வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்பட உள்ளது. இதனால் ஞாயிற்றுக் கிழமையும் மாத சம்பளத்தை பெற முடியும்.

ATM இயந்திரங்களில் பரிமாற்றக் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. வங்கிகள் பரிமாற்றக் கட்டணத்தை ₹ 15 ல் இருந்து ₹ 17 ஆக அதிகரிக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு, இந்த கட்டணம் ₹ 5 ல் இருந்து ₹ 6 ஆக அதிகரிக்கப்படும். ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டண கடைசியாக ஆகஸ்ட் 2012 ல் அதிகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் திரையரங்குகள் திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் Doorstep Service களை பெறுவதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும். முன்னதாக கட்டணம் வசூலிக்காத பல சேவைகளுக்கு இனி தனித்தனியாக ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படும்.

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளின் கட்டணங்களை கடந்த வாரம் அறிவித்துள்ளது. அதன்படி, பண பரிவர்த்தனைகள், ஏடிஎம் பரிமாற்றம் மற்றும் காசோலை புத்தகம் போன்றவற்றிற்கு முதல் 4 சேவைகள் மட்டுமே இலவசமாக அளிக்கப்படும். அதற்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும். ஒரு மாதத்தில் அதிகபட்சம் ரூ.150 வரை மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை இனி ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சந்தையில் கச்சா எண்ணெய் மதிப்பை மதிப்பாய்வு செய்து நிர்ணயிக்கப்படும். மேலும், இந்த புதிய விதி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here