IT நிறுவன ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட் – அதிகளவு சம்பள உயர்வு! ஆய்வில் தகவல்!

0
IT நிறுவன ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட் - அதிகளவு சம்பள உயர்வு! ஆய்வில் தகவல்!
IT நிறுவன ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட் - அதிகளவு சம்பள உயர்வு! ஆய்வில் தகவல்!
IT நிறுவன ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட் – அதிகளவு சம்பள உயர்வு! ஆய்வில் தகவல்!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் புதிய வேலைவாய்ப்புகளுக்கு மத்தியில், அடுத்து வரவிருக்கும் 2022 ஆம் ஆண்டில் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்கள் அதிகளவு ஊதிய உயர்வை பெறுவார்கள் என ஆய்வுத்தகவல்கள் கூறுகிறது.

ஊதிய உயர்வு

கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் பொருளாதார மீட்பு மற்றும் நிறுவனங்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதன் மூலம், 2022 ஆம் ஆண்டில் ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு அதிகரிக்க இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் ஆரம்ப மதிப்பீடுகளின்படி, அடுத்த ஆண்டில் ஊழியர்களுக்கான சராசரி சம்பள உயர்வு சுமார் 8.6 சதவீதமாக இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில் சுமார் 25%, வரவிருக்கும் 2022ம் ஆண்டில் இரட்டை இலக்க ஊதிய அதிகரிப்பை ஏற்படுத்த இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

செப்.27 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

மேலும் கணக்கெடுப்பின் முடிவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் சுமார் 92 சதவிகித நிறுவனங்கள் சராசரியாக 8.0 ஊதிய சதவிகித அதிகரிப்புகளை வழங்கிது குறிப்பிடத்தக்கது. இப்போது 2020 ஆம் ஆண்டில், கொரோனா தொற்று நோய்களின் போது, 60% நிறுவனங்கள் மட்டுமே ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை நீட்டித்தது. அதுவும் வெறும் 4.4 சதவிகிதம் மட்டுமே. இது தொடர்பாக Deloitteன் பங்குதாரர் ஆனந்தோருப் கோஸ் கூறுகையில், ‘2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022 இல் பெரும்பாலான நிறுவனங்கள் ஊதிய அதிகரிப்பை திட்டமிட்டுள்ளன.

இதற்கிடையில் 2021-22 ஆம் நிதியாண்டிற்கான GDP கணிப்புகள் கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு திருத்தப்பட்டன. அதன் கீழ் அடுத்த ஆண்டு, நிறுவனங்கள் தங்கள் நிலையான ஊதிய அதிகரிப்புகளை உருவாக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் (IT) துறையில், 2022 ஆம் ஆண்டில் ஊதிய அதிகரிப்புகள் உருவாகும். குறிப்பாக இரட்டை இலக்க ஊதிய அதிகரிப்புகள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

குறிப்பாக திறமை மற்றும் செயல்திறனைப் பொறுத்து ஊதிய உயர்வுகள் மாறுபடும் என்று கணக்கெடுப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு சிறந்த ஊழியர் அடிப்படை சம்பளத்தை விட 1.8 மடங்கு வரை சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். இதனுடன் சில்லறைத் துறை, விருந்தோம்பல், உணவகங்கள், உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் அந்தந்த துறைகளுக்கு ஏற்ப மிகக் குறைந்த ஊதிய உயர்வுகளை அளிக்கும்.

WhatsApp Payment இல் கிடைக்கும் கேஷ்பேக் – சூப்பர் ஆஃபர் அறிமுகம்!

இப்போது, பதவி உயர்வு அடிப்படையில் கணக்கிடுகையில், 2021 இல் சுமார் 12 சதவீத ஊழியர்கள் பதவி உயர்வு பெற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார சூழ்நிலைகள் மாறும்போது சுமார் 12 சதவீத நிறுவனங்கள் போனஸ் அல்லது புதிய ஊதிய திட்டங்களை புதுப்பிக்க உள்ளன. இதற்கிடையில் தொற்றுநோய்க்கு முன்பு இருந்த அதே வேகத்தில் புதிய ஆட்சேர்ப்பு பணிகளும் துவங்கியுள்ளதாக 78% நிறுவனங்கள் தெரிவித்துள்ளது கூடுதல் தகவல்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!