உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கான காரணம் என்ன? 3வது உலக போருக்கு வித்திட்ட முழு பின்னணி இதுதான்!

0
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கான காரணம் என்ன? 3வது உலக போருக்கு வித்திட்ட முழு பின்னணி இதுதான்!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கான காரணம் என்ன? 3வது உலக போருக்கு வித்திட்ட முழு பின்னணி இதுதான்!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கான காரணம் என்ன? 3வது உலக போருக்கு வித்திட்ட முழு பின்னணி இதுதான்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் பதட்டமான இந்த சூழ்நிலையில், இதற்கு காரணம் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ரஷ்யா போர்

கடந்த 80ம் ஆண்டுகளில் உலக அரசியல் வரலாறு அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவற்றை மையமாக கொண்டு இயங்கி வந்தது. ஆனால் 1991ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு இதில் இணைக்கப்பட்டிருந்த ரஷ்யா, உக்ரைன் மற்றும் அதனை சுற்றி இருந்த நாடுகள் சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தாரளமயமாக்கல் எனும் புதிய பொருளாதார கொள்கைகளை உலக நாடுகள் பல ஆக்கிரமிக்க துவங்கின. இதனால் மீண்டுமாக சர்வதேச அரசியல் முழுமையான மாற்றம் கண்டது.

SBI வங்கியில் 48 காலிப்பணியிடங்கள் – ரூ.63,840 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த மாற்றம் தற்போது அமெரிக்கா அதன் சார்பு நாடுகள், ரஷ்யா அதன் சார்பு நாடுகள், சீனா அதன் சார்பு நாடுகள், வடகொரியா என தனித்தனி ராஜ்ஜியங்களாக உருவாகி இருக்கிறது. இதில் நாம் எல்லாரும் அறிந்தபடி அமெரிக்கா வலிமையான நாடாக உருவாகி இருக்கிறது. இப்போது அமெரிக்கா தலைமையில் செயல்பட்டு வரும் நேட்டோ அமைப்பு ஒரு வடக்கு அட்லாண்டிக் நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். இந்த அமைப்பில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 12 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அமைப்பு உருவானதற்கான பின்னணி என்னவென்று கவனிக்கையில், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தானின் பயங்கரவாதத்தை ஒடுக்குவதாக அமைக்கப்பட்டவை என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் கூட ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தாலிபான்களுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு போரில் நேட்டோ அமைப்பு ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவு கொடுத்து, கடைசியில் இந்த முயற்சியில் இருந்து பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இப்போது அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ அமைப்பு, தனது அமைப்பில் நட்புறவுடன் உள்ள நாடுகளுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதில் தலையிட்டு சிக்கலை சரி செய்வதை கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இப்போது ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையில் இந்த நேட்டோ அமைப்பு தலையிடுவதற்கான காரணம் உக்ரைனின் கூட்டமைப்பு தான். அதாவது, சோவியத் ஒன்றியம் பிரிந்த போது நேட்டோ அமைப்பு ஐரோப்பியாவின் விஷயங்களில் தலையிடப்போவதில்லை என்று கூறி, பின்னர் ரஷ்யாவின் எஸ்தோனியா, லாத்வியா, லிதுனியா, போலந்த், செக் குடியரசுகள், ஸ்லோவேகியா, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா உள்ளிட்ட அண்டை நாடுகளை தன் பக்கம் இழுத்து கொண்டது.

இதனை தொடர்ந்து 2014ல் உக்ரேனில் நடைபெற்ற அரசியல் மாற்றத்தால் ரஷ்யா ஆதரவு அதிபர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். இதற்கு பழி தீர்க்கும் விதமாக கிரீமியாவை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதற்கு, ரஷிய மக்களின் கிளர்ச்சியை காரணமாக குறிப்பிட்டது ரஷ்யா. தொடர்ந்து டொனெட்ஸ்க், லூஹான்ஸ் போன்ற உக்ரைனின் எல்லைப்பகுதியில் ஏற்பட்டு வரும் கிளர்ச்சியை காரணம் காட்டி, இப்போது ரஷ்யா தனது போர்ப்படையை உக்ரைனுக்கு அனுப்பியது.

Post Office இல் சேமிக்க நினைப்போர் கவனத்திற்கு – குறைந்தபட்சம் ரூ.100 முதல்! சூப்பர் திட்டங்கள்!

இப்போது நேட்டோ படைகள் உக்ரைனுக்கு ஆதரவாக இந்த போரில் களமிறங்கினால், அதன் ஆயுத பலத்தை காட்டுவதற்காக ரஷ்யா கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், நேட்டோ படைகளை ஐரோப்பாவில் இருந்து விரட்டுவதற்காக தான் ரஷ்யா உக்ரைனை ஒரு பகடைக்காயாக பயன்படுத்துகிறது என்றும் பேச்சுக்கள் எழுந்திருக்கிறது. என்றாலும் இப்போது ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போர் துவங்கி இருக்கும் நிலையில், இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ படைகள் களமிறங்கினால் 3வது உலக மகா யுத்தத்தை எதிர்கொள்ள கூடும் என்று உலக நாடுகள் அச்சப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!