பழைய 2 ரூபாய் நாணயத்துக்கு ரூ.5 லட்சம் மதிப்பு – Quikr இன் அதிரடி சலுகை!

41
பழைய 2 ரூபாய் நாணயத்துக்கு ரூ.5 லட்சம் மதிப்பு - Quikr இன் அதிரடி சலுகை!
பழைய 2 ரூபாய் நாணயத்துக்கு ரூ.5 லட்சம் மதிப்பு - Quikr இன் அதிரடி சலுகை!
பழைய 2 ரூபாய் நாணயத்துக்கு ரூ.5 லட்சம் மதிப்பு – Quikr இன் அதிரடி சலுகை!

இந்தியாவில் புழக்கத்தில் இருந்து வந்த ரூபாய் நாணயங்கள் பல தற்போது பயன்பாட்டில் இருந்து குறைந்துள்ளது. ஆனால் ஒருவேளை உங்களிடம் பழைய இரண்டு ரூபாய் நாணயம் இருந்தால் அவை உங்களுக்கு பல லட்சம் ரூபாயை பெற்றுத்தர உள்ளது. அது எப்படி என்பதை இப்பதிவில் காணலாம்.

2 ரூபாய்க்கு 5 லட்சம்:

பொதுவாக பழையன கழிதல், புதியன புகுதல் என்ற அடிப்படையில் நம்மில் பலர் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை தேவையற்றவை என கழித்திருப்போம். ஆனால் சிலரோ இன்னும் கூட பழைய அரியவகை பொருட்களை சேமிக்கும் ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு அதிரடி சலுகையை Quikr நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருந்து குறைந்திருக்கும் 2 ரூபாய் நாணயம், உங்களுக்கு 5 லட்சத்தை பெற்றுத்தரவுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 44 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் – தலைமை செயலாளர் உத்தரவு!!

அதன் படி பெங்களூரை மையமாக கொண்ட Quikr இணையதளத்தில் பழைய நாணயத்திற்கு பதிலாக 5 லட்ச தொகையை தருவதாக விளம்பரங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் 1994 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 2 ரூ நாணயத்தில் ஒருபுறம் இந்தியக் கொடி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் Quikr இணையதளத்தில் அதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தின் மதிப்பு, மற்றும் விக்டோரியா மகாராணியின் படம் அதில் பதிக்கப்பட்டிருந்தால், அதன் மதிப்பு ரூ.2 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் 1918 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட மற்றொரு நாணயத்தில், பிரிட்டிஷ் கிங் ஜார்ஜ் V இன் படத்துடன் உள்ள ஒரு ரூபாய் நாணயம், ரூ.9 லட்சத்திற்கு விற்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாணயத்தின் மதிப்பு வாங்குபவர் மற்றும் விற்பவரை சார்ந்து அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவைகளை பெற நீங்கள் முதலில் Quikr வலைதளத்தில் உங்கள் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இது வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் இடையே நேரடி வர்த்தகத்தை உருவாக்குகிறது.

TN Job “FB  Group” Join Now

அதன் பிறகு, உங்களிடம் உள்ள நாணயத்தின் படத்தைக் கிளிக் செய்து, அதை இணையதளத்தில் விற்பனைக்கு வைக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். அவர்களுடன் இறுதி விலை குறித்து நீங்கள் பேசி முடிவு செய்து கொள்ளலாம். இது தவிர Coinbazzar வலைதளம், பழைய ரூ.10 நோட்டுகளை 25,000 ரூபாய்க்கு விற்பனை செய்து தருகிறது. அதன் படி 10 ரூபாய் காகிதத்தில் ஒரு பக்கத்தில் அச்சிடப்பட்ட அசோக தூண் மற்றும் மறுபுறம் ஒரு படகு இருக்க வேண்டும்.

இந்த ரூபாய் நோட்டு 1943 ஆம் ஆண்டில், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது வெளியிடப்பட்டது. மேலும் அதில் அப்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சி.டி. தேஷ்முக் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். இது தவிர, இரு முனைகளிலும் 10 ரூபாய் என ஆங்கில மொழியில் பின்புறத்தில் எழுதியிருக்க வேண்டும். இந்த அம்சங்களுடன் உள்ள 10 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருந்தால், அதை ஆன்லைனில் Coinbazzar தளத்தில் விற்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

41 COMMENTS

  1. We have that indian two rupee with the india and the flag at the backside of it…and it is made in the year of 1994.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!