‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் புதிய தோற்றம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் புதிய தோற்றம் - ரசிகர்கள் உற்சாகம்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் புதிய தோற்றம் - ரசிகர்கள் உற்சாகம்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் புதிய தோற்றம் – ரசிகர்கள் உற்சாகம்!

பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்து பிரபலமாகிய நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் இணையத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் இது ரோஷினி தானா? என வியக்க வைத்துள்ளது.

பாரதி கண்ணம்மா ரோஷினி:

இன்றைய காலகட்டத்தில் சினிமா நட்சத்திரங்களை விட நாள்தோறும் ஒளிபரப்பாகி வருகிற சீரியல் நட்சத்திரங்களுக்கே ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் நடித்த முதல் சீரியலிலே தனக்கான முத்திரையை பதித்த நடிகை தான் ரோஷினி ஹரிப்பிரியன். இவர் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து டாப் ட்ரெண்டிங்கில் இருந்த சமயம் சில தவிர்க்க முடியாத காரணத்தால் சீரியலை விட்டு விலகினார்.

Exams Daily Mobile App Download

ஆனாலும் சீரியலை விட்டு விலகிய பொழுதும் அவரை மிஸ் செய்யக்கூடிய பல ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள். அதன் பிறகு தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். மேலும், சின்னத்திரை நட்சத்திரங்களில் பலரும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருந்து தினசரி வாழ்க்கையிலும் சரி, படப்பிடிப்பு தளங்களிலும் சரி என்னென்ன நடக்கிறது என அதை குறித்ததான விடியோக்களையும், சில புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

இதனை ரசிகர்களும் அதிகளவில் விரும்பி பார்த்து பின்தொடர்ந்து வருகிறார்கள். அது போலவே சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவ் ஆக இருந்து வரும் ரோஷினி தினசரி ஒரு போட்டோ ஷூட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்து லைக்குகளை பெற்று வருகிறார். இந்நிலையில் தற்சமயம் வெளியிட்டுள்ள போஸ்ட் ஒன்று படு வைரலாகி வருகிறது. அதில் பாரம்பரிய உடையான பாவாடை தாவனியை பச்சை நிறத்தில் அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.இந்த படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்தக்களை கூறி வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!