ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ரூ.40 லட்சம் நுழைவு வரி செலுத்திய நடிகர் விஜய்!
தமிழகத்தில் முன்னணி நடிகரான விஜய் நீதிமன்றத்தின் உத்தரவு படி தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான மொத்த நுழைவு வரி ரூபாய் 40 லட்சத்தை செலுத்தியுள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸ் கார்:
தமிழகத்தில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நடிகர் விஜய் கடந்த 2012 ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை வாங்கினார். இது தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த புதிய காரரை அவர் பதிவு செய்ய முயற்சித்த போது தமிழகத்திற்கு வந்ததற்கான நுழைவு வரியை செலுத்த வேண்டும் என வட்டார போக்குவரத்து துறை அறிவுறுத்தியது. இந்த நிலையில் நடிகர் விஜய் நான் ஏற்கனவே நுழைவு வரி செலுத்தி விட்டதாக தெரிவித்தார். இதை வட்டார போக்குவரத்து துறை மறுத்தது.
ஆகஸ்ட் 16 முதல் வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறப்பு – மேகாலயா அரசு அனுமதி!
இதனால் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணையில் படத்தின் ஹீரோக்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என்ற கருத்தை நீதிபதி முன் வைத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அந்த நீதிபதி நடிகர் விஜய்க்கு ரூபாய் 1 லட்சம் அபராதமும் விதித்தார். அதை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
TN Job “FB
Group” Join Now
இந்த உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது இந்த வழக்கு விசாரணையில் நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு 80 சதவீத வரி தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டது. இதனை ஏற்று நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி 80 சதவீதம் மற்றும் மொத்த நுழைவு வரி ரூ.40 லட்சத்தை செலுத்தியுள்ளார்.