சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நடிகை அனுவுக்கு திருமணம், வைரலாகும் பதிவு – ரசிகர்கள் வாழ்த்து!

0
சன் டிவி 'ரோஜா' சீரியல் நடிகை அனுவுக்கு திருமணம், வைரலாகும் பதிவு - ரசிகர்கள் வாழ்த்து!
சன் டிவி 'ரோஜா' சீரியல் நடிகை அனுவுக்கு திருமணம், வைரலாகும் பதிவு - ரசிகர்கள் வாழ்த்து!
சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நடிகை அனுவுக்கு திருமணம், வைரலாகும் பதிவு – ரசிகர்கள் வாழ்த்து!

தமிழ் மொழியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் டாப் 1 இடத்தை வகித்திருக்கும் ‘ரோஜா’ வில், வில்லியாக நடித்து வரும் விஜே அக்ஷயாவுக்கு திருமணமாகி ஒரு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், அந்நாளை நினைவு கூறும் விதத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

விஜே அக்ஷயா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான ‘ரோஜா’ பெருமளவு ரசிகர்களை கொண்டுள்ள ஒரு முக்கியமான தொடராகும். இந்த தொடர், அனாதை பெண்ணான ரோஜா, சூழ்நிலை காரணமாக பணக்காரர் அர்ஜுனை கரம் பிடிக்க, அந்த குடும்பத்தினரின் வெறுப்பை சம்பாதிக்கிறார். இருந்தாலும் கணவரின் குடும்பத்தின் நன்மைக்காக போராடும் ரோஜாவுக்கு பக்கபலமாக அவரது கணவரும், அத்தையும் உடன் இருக்கின்றனர். அந்த வகையில் அர்ஜுனின் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை ரோஜா எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம்.

விநாயகர் சதுர்த்தி விழா திட்டமிட்டபடி நடைபெறும் – இந்து முன்னணி தலைவர்!

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ரோஜா சீரியலில், நடிகர் சிப்பு சூர்யன், நடிகை பிரியங்கா நல்காரி, வடிவுக்கரசி உள்ளிட்ட முன்னணி சீரியல் நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இத்தொடரில் அனு என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஷாமிலி, சமீபத்தில் சில தனிப்பட்ட காரணங்களுக்காக சீரியலை விட்டு விலகினார். இதை தொடர்ந்து அனு கதாபாத்திரத்தில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி அக்ஷயா நியமிக்கப்பட்டார்.

TN Job “FB  Group” Join Now

தனது வில்லத்தனத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ள விஜே அக்ஷயாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாம். அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர் 2 என்ற இதே நாளில், அக்ஷயா மற்றும் நியந்தன் மணிசேகரன் என்பவருக்கு திருமணம் நிகழ்ந்துள்ளது. தற்போது அக்ஷயாவுக்கு திருமணமாகி ஒரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். என்றாலும், அக்ஷயாவுக்கு திருமணம் ஆன விவரம் தெரிந்து வருத்தத்தில் இருக்கும் அவரது ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை சொல்ல தவறவில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!