விநாயகர் சதுர்த்தி விழா திட்டமிட்டபடி நடைபெறும் – இந்து முன்னணி தலைவர்!
கொரோனா தாக்கத்தின் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க மற்றும் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை திரும்ப பெற கோரி இந்து முன்னணி போராட்டம் நடத்தி வருகிறது.
விநாயகர் சதுர்த்தி:
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வருவதை தொடர்ந்து விநாயகர் சிலை விற்பனை அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வரும் செப்.15 ஆம் தேதி வரை அனைத்து மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவுவதற்கும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
செப்.5 க்குள் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி – மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்!
அதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் கோவில்களில் வழிபாடு நடத்தி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பெண்கள் மண்ணை தூவி சாபமிட்டும், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆண்டுதோறும், தமிழகம் முழுவதும் விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவதாகவும், விநாயகர் சதுர்த்தியை தடை செய்யும் நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
TN Job “FB
Group” Join Now
அதனை தொடர்ந்து திட்டமிட்டபடி 1.25 லட்சத்துக்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த உள்ளதாக அவர் கூறினார். கடந்த முறை 5 லட்சம் வீடுகளில் விநாயகர் சிலை வைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டு அதனை விட அதிகம் வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்து முன்னணியை அழைத்து தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும் எனவும் விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.