திருப்பதி பக்தர்களுக்கு சில்லறை நாணயங்கள் தனப் பிரசாதம் – புதிய திட்டம்!
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் சேரும் சில்லறை நாணயங்களை வங்கிகள் வாங்க மறுக்கின்றனர். அதன் காரணமாக தனப் பிரசாதம் என்ற முறையில் பக்தர்களுக்கு அதனை வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தான பிரசாதம்:
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஏழுமலையானுக்கு படைக்கப்படும் ஜிலேபி, முறுக்கு ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். திருப்பதி ஏழுமலையான் பணக்கார கோயில் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் காணிக்கையாக பணத்தை கொண்டு வந்து குவித்து வருகின்றனர்.
சென்னை, கோவை உள்ளிட்ட 35 நகரங்களில் 8,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – அமேசான் தகவல்!
ஏழுமலையான் கோவில் உண்டியலில் தினசரி 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை சில்லறை நாணயங்கள் காணிக்கையாக குவிந்து வருகின்றன. பக்தர்கள் அளித்து வரும் ரூபாய் நோட்டுகளை நேரடியாக வங்கிகளில் முதலீடு செய்து வருகின்றனர். அதே போல் சில்லறை காசுகளை பெற்றுக் கொள்வதற்கு வங்கிகள் முன்வருவதில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக கோவிலில் சேரும் நாணயங்களின் இருப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
TN Job “FB
Group” Join Now
எனவே இவ்வாறு குவிந்து வரும் சில்லறை நாணயங்களை தனப் பிரசாதம் என்ற முறையில் பக்தர்களுக்கு திருப்பி அளிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் விடுதிகளில் தங்கி வருகின்றனர். இவ்வாறு தங்கும் அறைக்கான வாடகையோடு கூடுதலாக வசூலிக்கப்படும் தொகையை நாணயங்களாக திருப்பி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. பக்தர்களிடையே தனப் பிரசாதம் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.