சென்னை, கோவை உள்ளிட்ட 35 நகரங்களில் 8,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – அமேசான் தகவல்!

0
சென்னை, கோவை உள்ளிட்ட 35 நகரங்களில் 8,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - அமேசான் தகவல்!
சென்னை, கோவை உள்ளிட்ட 35 நகரங்களில் 8,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - அமேசான் தகவல்!
சென்னை, கோவை உள்ளிட்ட 35 நகரங்களில் 8,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – அமேசான் தகவல்!

அமேசான் நிறுவனம் இந்தியாவின் முக்கியமான 35 நகரங்களில் உள்ள 8,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இருப்பதாக அந்நிறுவனத்தின் மனிதவளத்துறைத் தலைவர் தீப்தி வர்மா அறிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு:

கொரோனா தொற்றின் ஊரடங்கு காலத்தில் பல தொழில்கள் பாதிப்படைந்தது. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களில் பாதிக்கும் அதிகமானோரை பொருளாதார சிக்கலினால் பணி நீக்கம் செய்தது. பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பாதி ஊதியம் மட்டுமே வழங்கி வருகிறது. இதனால் பல தரப்புகளிலும் பொருளாதார சிக்கல்கள் எழுந்துள்ளது. ஆனால் ஊரடங்கு காலத்திலும் பல ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை அமேசான் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மேலும் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிவிட்டது.

IND vs ENG 4வது டெஸ்ட் – மீண்டும் சொதப்பிய இந்திய ஓப்பனர்கள்! கே எல் ராகுல் காலி!!

சமீப காலத்தில் 3 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கியது. அனைவரும் காணொலி மூலமே தேர்வு செய்யப்பட்டனர். தற்போது, அமேசான் நிறுவனத்தின் மனிதவள துறைத் தலைவர் தீப்தி வர்மா வரும் செப்டம்பர் 16-ம் தேதி இந்தியாவில் மிகப்பெரிய அளவில் இளைஞர்களுக்கு வழிகாட்டும் முகாம் நடத்த இருப்பதாகவும், இந்த நிகழ்வு காணொலி மூலம் நடக்கும் என்றும் அறிவித்துள்ளார். முகாமில் 140 அமேசான் ஊழியர்கள், 2 ஆயிரம் பேருக்குப் பயிற்சி முகாம்களையும் நடத்த உள்ளனர். இந்த பயிற்சி முகாமில் இளைஞர்களுக்கு திறமையான முறையில் வேலை தேடுவது, பயோ டேட்டா வடிவமைத்தல், நேர்காணலில் பங்கேற்கும் முறை, பதில் அளிப்பது போன்ற அறிவுரைகள், வழிகாட்டல்கள் வழங்கப்படும் என்று கூறினார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் நாட்டில் லூதியானா, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, நொய்டா, அமிர்தசரஸ், அகமதாபாத், போபால், ஜெய்ப்பூர், கான்பூர், லூதியானா, சூரத், புனே உள்ளிட்ட 35 நகரங்களில் உள்ள 8,000 இளைஞர்களுக்கு புதிதாக நேரடி வேலைவாய்ப்பு உருவாக்க உள்ளதாக கூறினார். இவர்களுக்கு, தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை, செயலாக்கம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். எந்திர அடிப்படையிலான அறிவியல் பிரிவுகளிலும் வேலைக்கு ஆட்களை சேர்க்க இருக்கிறோம் என்றும் மனித வளத்துறை தலைவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!