‘இந்த’ வங்கியின் உரிமம் இனி ரத்து.. ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு – பணத்தை சீக்கிரம் எடுத்துருங்க!

0
'இந்த' வங்கியின் உரிமம் இனி ரத்து.. ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு - பணத்தை சீக்கிரம் எடுத்துருங்க!
'இந்த' வங்கியின் உரிமம் இனி ரத்து.. ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு - பணத்தை சீக்கிரம் எடுத்துருங்க!
‘இந்த’ வங்கியின் உரிமம் இனி ரத்து.. ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு – பணத்தை சீக்கிரம் எடுத்துருங்க!

லக்ஷ்மி கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மற்றும் டெபாசிட் செய்தவர்களின் பணம் குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி:

மகாராஷ்டிராவில் உள்ள லக்ஷ்மி கூட்டுறவு வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி வியாழக்கிழமையான நேற்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. வங்கிக்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லை என்ற காரணத்தால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் ரத்து செய்யப்பட்டதன் விளைவாக, லக்ஷ்மி கூட்டுறவு வங்கியானது, வங்கி தொடர்பான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்று ரிசர்வ் வங்கி தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), செப்டம்பர் 14ம் தேதியிட்ட உத்தரவின்படி, செப்டம்பர் 22ம் தேதியான நேற்றுடன் தன் செயல்பாட்டை லக்ஷ்மி கூட்டுறவு வங்கி முடித்துக் கொள்ள வேண்டும். மேலும் மகாராஷ்டிராவின் கூட்டுறவு ஆணையர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரும் வங்கியை மூடுவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது தொடர்பான காரணங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அதிகம் பரவும் மர்ம காய்ச்சல்.. மக்களே உஷார் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Exams Daily Mobile App Download

வங்கியை மூடுவதால் அதன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்று பலரும் அச்சம் கொண்டனர். ஆனால், வங்கியின் ஒவ்வொரு டெபாசிட்டரும் டிஐசிஜிசி சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷனிடமிருந்து (டிஐசிஜிசி) தலா ரூ.5 லட்சம் வரை டெபாசிட் காப்பீட்டுக் கோரிக்கைத் தொகையைப் பெற உரிமை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here