தமிழகத்தில் அதிகம் பரவும் மர்ம காய்ச்சல்.. மக்களே உஷார் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

0
தமிழகத்தில் அதிகம் பரவும் மர்ம காய்ச்சல்.. மக்களே உஷார் - சுகாதாரத்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் அதிகம் பரவும் மர்ம காய்ச்சல்.. மக்களே உஷார் - சுகாதாரத்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் அதிகம் பரவும் மர்ம காய்ச்சல்.. மக்களே உஷார் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பருவநிலை மாற்றம் காரணமாக பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தற்போது மர்ம காய்ச்சல் ஒன்று பரவி வருவதால் சுகாதாரத்துறை அது குறித்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

காய்ச்சல் அறிகுறி:

தமிழகத்தில் கொரோனா பரவலில் இருந்து மக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில், தற்போது தான் நிலைமை சரியாகி மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை வழக்கம் போல வாழ தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் முதல் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பன்றி காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், மர்ம காய்ச்சல் உள்ளிட்ட பல காய்ச்சல்கள் பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த காய்ச்சலால் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் காய்ச்சலால், 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் அதிக பேர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி மாவட்டத்தில் 5 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FD கணக்கு வைத்துள்ளீர்களா? அதிரடி முடிவை வெளியிட்ட பிரபல வங்கிகள்! விவரம் இதோ!

அதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் எனவும், அது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 2 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்படுகிறது. இந்த காய்ச்சல் ஏ பி சி என 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் சி வகையில் இருப்பவர்களுக்கு தான் மருத்துவர்களின் சிகிச்சை தேவைப்படுகிறது.

Exams Daily Mobile App Download

மேலும் சி வகையில் இருப்பவர்கள் தான் மருத்துவமனைகளில் அனுமதிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் பன்றி காய்ச்சல் பாதிப்பு குறித்து பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பற்றி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளன. அதன் படி காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல், வாந்தி போன்றவை பன்றி காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். மேலும் நோயின் தாக்கம் தீவிரம் அடைந்தால் மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் நேரம் கடத்தாமல் அருகில் இருக்கும் அரசு, தனியார் மருத்துவமனைகளை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அறிகுறிகள் குழந்தைகளுக்கு இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். மேலும் இந்த பாதிப்புகள் தென்பட்டால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here