தமிழக 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மதிப்பெண் மறுகூட்டலுக்கான வழிமுறைகள் வெளியீடு!

0
தமிழக 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - மதிப்பெண் மறுகூட்டலுக்கான வழிமுறைகள் வெளியீடு!
தமிழக 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - மதிப்பெண் மறுகூட்டலுக்கான வழிமுறைகள் வெளியீடு!
தமிழக 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மதிப்பெண் மறுகூட்டலுக்கான வழிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக்கான முடிவு இன்று வெளியானதை அடுத்து மதிப்பெண்ணில் ஏதேனும் மாற்றம் இருக்குமென்றால் அதற்கான நடைமுறைகளை தமிழக அரசு விரைவாக மேற்கொள்ள இருக்கிறது.

மதிப்பெண் மறுகூட்டல்:

கோவிட் 19 காலமாகிய இரண்டு ஆண்டு காலம் நாடே தலைகீழாக மாறி பல மாற்றங்கள் அமைந்ததில் ஒன்றாக கல்வியும் கேள்வி குறியானது. அப்படி இருக்கையில் நடப்பு ஆண்டில் அனைத்தும் பழைய நிலைக்கு திரும்பும் விதமாக இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் மே மாதம் இறுதி வரை நடந்து முடிந்தது. இவ்வாறு பள்ளிகள் திறப்பதில் உள்ள நன்மை, தீமை என அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து ஒவ்வொன்றையும் மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசு பார்த்து பார்த்து பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அவ்விதமாக கடந்த ஜூன் 13 ல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளும் நடந்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று ஜூன் 20 ல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொதுத் தேர்வை மொத்தம் 8,06,277 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று முதல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகள் பல நடைபெற்று வருகிறது. முக்கியமாக உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் சேர்க்கை காலங்காலமாக 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருவதால் அம்மாணவர்களின் கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

PM KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – 12 தவணைக்கான பணம் எப்போது?

அவ்விதமாக மேற்குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மதிப்பீடு முறையில் திருப்தி அடையாத மாணவர்கள் அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்களின் உயர் கல்வியை கருத்தில் கொண்டு அரசுத் தேர்வுகள் இயக்கம் விடைத்தாள்கள் மறுமதிப்பீடு திட்டத்தை விரைவாக மேற்கொண்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வின் முடிவை அறிந்த மாணவர்களில் சிலர் தங்களுக்கு மதிப்பெண்கள் கூடுதலாக வர வாய்ப்புள்ளது என்று நினைத்தால் மறுக்கூட்டல் என்ற திட்டத்தின் மூலம் விண்ணப்பித்து பயன் பெறுவர்.

அதன் படி இந்த ஆண்டும் பொதுத் தேர்வு மதிப்பெண்ணில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது என நினைக்கும் மாணவர்களது விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யும் நடைமுறையும் பின்பற்றி அதன் மூலம் அம்மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்தால், அதன் அடிப்படையில் திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு மறுமதிப்பீடு விண்ணப்பிப்பதன் மூலம் மதிப்பெண்கள் குறைவதற்கும் அதிகளவு வாய்ப்புள்ளது. மேலும், மறுமதிப்பீடு செய்யாமல் விடைத்தாளை பெற விரும்புபவர்கள் ஜெராக்ஸ் நகளுக்கு மட்டும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் சராசரியாக கிட்டத்தட்ட 1 லட்சம் மாணவர்கள் பலனடைந்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here