தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஜன.3 முதல் தினசரி வகுப்புகள் – CEO ஆலோசனை கூட்டம்!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஜன.3 முதல் தினசரி வகுப்புகள் - CEO ஆலோசனை கூட்டம்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஜன.3 முதல் தினசரி வகுப்புகள் - CEO ஆலோசனை கூட்டம்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஜன.3 முதல் தினசரி வகுப்புகள் – CEO ஆலோசனை கூட்டம்!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 3ம் தேதி முதல் சுழற்சி முறை இன்றி தினசரி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது.

ஆலோசனை கூட்டம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து இரண்டு வருடங்களுக்கு பிறகு அனைத்து வகுப்புகளுக்கும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியுள்ளது. வெகு நாட்களாக மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டது. மேலும் கொரோனா அச்சத்தால் சுழற்சி முறையில் மட்டுமே நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 17ம் தேதி 10, 11, 12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற தொடங்கியது. மேலும் நடப்பாண்டு கட்டாயம் பொதுத்தேர்வும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விரைவில் முழு ஊரடங்கு? ஓமைக்ரான் எதிரொலி! மத்திய அமைச்சகம் தகவல்!

மே மாதம் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது 1 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு இன்று முதல் (25.12.2021) ஜனவரி 2 வரை மொத்தம் 9 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் ஜனவரி 3ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ATM கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – ஜனவரி 1 முதல் கூடுதல் கட்டணம் வசூலிப்பு!

ஜனவரி 3 முதல் சுழற்சி வகுப்புகள் இன்றி தினசரி வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் நடத்துவது குறித்தும் நிர்வாக நடைமுறை குறித்து ஆய்வு செய்ய டிசம்பர் 28ம் தேதி அன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் சென்னையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. பள்ளி கட்டட விபத்துகள், ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு போன்றவைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here