Pongal Special 2022 – மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவது ஏன்? தவறாமல் படிங்க!

0
Pongal Special 2022 - மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவது ஏன்? தவறாமல் படிங்க!
Pongal Special 2022 - மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவது ஏன்? தவறாமல் படிங்க!
Pongal Special 2022 – மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவது ஏன்? தவறாமல் படிங்க!

தமிழகத்தில் தை திருநாளை முன்னிட்டு விவசாயம் மற்றும் விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் மாடுகளை போற்றும் வகையில் மாட்டு பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்னும் சிறப்பிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போன்றவைகள் நடைபெறும்.

மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவது ஏன்?

தமிழ்நாட்டில் தமிழர் திருநாளாக கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை ஆகும். இந்த பண்டிகை 4 நாட்கள் தொடர்ந்து திருவிழா போல் கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஜனவரி 13 வியாழன் ஆண்டு போகி ஆகும். இதனை தொடர்ந்து அடுத்த நாளான ஜனவரி 14 வெள்ளிக்கிழமை தைப்பொங்கல், தொடர்ந்து ஜனவரி 15 சனிக்கிழமை ஆண்டு மாட்டு பொங்கலும், ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. தற்போது கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் தீவிரமடைந்து உள்ள நிலையிலும் மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

தமிழகத்தில் ஜன.17 (திங்கட்கிழமை) பொது விடுமுறை – அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

பொங்கல் பண்டிகை மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை போற்றும் விதமாக ஆண்டுதோறும் தை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வகையில் சூரியனை வழிபடுவது தை பொங்கலின் முக்கிய நோக்கம் ஆகும். கிராமங்களில் மண்பானையில் அவரவர் விவசாய நிலங்களில் விளைந்த அரிசியை கொண்டு பொங்கல் வைக்கப்படும். இந்த பொங்கலை சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவார்கள். சூரியனை வழிபட்ட பிறகு அடுத்த நாள் மாடுகளைப் போற்றும் வகையில் மாட்டு பொங்கல் கொண்டாடபடுகிறது.

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? ஜன.13ல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

மாட்டு பொங்கல் அன்று மாடுகளை குளிக்க வைத்து சுத்தம் செய்து அவற்றின் கொம்புகளில் வர்ணம் பூசி அவற்றை மேலும் அலங்கரித்து, சலங்கைகளையும் கட்டி விடுவார்கள். மேலும் மாடுகளுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு உள்ளிட்டவற்றையும் அணிவித்து அலங்கரித்து வழிபடுவார்கள். இந்த வகையில் மாடுகள் மட்டுமின்றி உழவுக்கு உதவும் கருவிகளையும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து மாடுகளோடு சேர்த்து அவற்றையும் வழிபடுவார்கள். மாட்டு பொங்கலை மேலும் சிறப்பிக்கும் வகையில் பல ஊர்களில் மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!