மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? கொரோனா பரவல் எதிரொலி!

0
மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? கொரோனா பரவல் எதிரொலி!
மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? கொரோனா பரவல் எதிரொலி!
மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? கொரோனா பரவல் எதிரொலி!

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட 2 மாத கால ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு பிறகு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் இந்த சூழலில் சீனாவின் ஷாங்காய் நகரத்தில் 4 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய வகை கொரோனா நோய்த்தொற்று பரவலை எதிர்கொண்ட சீனாவின் ஷாங்காய் நகரம் கிட்டத்தட்ட இரண்டு மாத கால முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குள் வைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சீனாவின் பூஜ்ஜிய கொரோனா கொள்கையின் படி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மக்களின் அன்றாட வாழ்க்கையை முடக்கிப் போட்டது. மேலும் ஊரடங்கு காலங்களில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள், மருந்துகள் கிடைக்காமல் பலர் இன்னல்களை சந்தித்து வந்தனர். இதற்கிடையில் ஒருவழியாக மே மாதத்தின் பிற்பகுதியில் இருந்து தினசரி செயல்பாட்டை குறைத்த ஷாங்காய் நிர்வாகம் பல கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்தியது.

Exams Daily Mobile App Download

தொடர்ந்து, சில பகுதிகளில் உள்ள உணவகங்கள் இந்த வாரம் முதல் உணவருந்தும் சேவைகளை மீண்டும் தொடங்கவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சீனாவின் முக்கிய நகரம் ஒன்றில் நேற்று (ஜூன் 26) நான்கு புதிய கொரோனா பாதிப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு தனிமைப்படுத்தலுக்கு வெளியே உள்ள இடங்களில் காணப்பட்டது. இந்த புதிய பாதிப்புகள் 25 மில்லியன் மக்கள் வசிக்கும் ஷாங்காய் நகரத்தில் இப்போது புதிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தம் அமல்!

இப்போது வரை சீனாவின் ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் நகரங்களில் பொது மக்கள் கொரோனா எதிர்மறையான சான்றிதழ்களை சமர்ப்பித்த பிறகு தான் வணிக வளாகங்கள், அலுவலக கட்டிடங்கள் மற்றும் பொது பூங்காக்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான நேரடி வகுப்புகள் இன்று (ஜூன் 27) முதல் மீண்டும் தொடங்கும் நிலையில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள கொரோனா புதிய பாதிப்புகள் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் பெய்ஜிங் நகர நிர்வாகம், மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கான கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here