RBI ன் அதிரடி முடிவு..ஊதிய வரம்பு உயர்வு – அறிக்கை வெளியீடு!

0
RBI ன் அதிரடி முடிவு..ஊதிய வரம்பு உயர்வு - அறிக்கை வெளியீடு!

இந்திய ரிசர்வ் வங்கியானது ஊழியர்களின் ஊதிய வரம்பு தொடர்பாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஊதிய வரம்பு:

இந்திய ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளின் நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறது/ தற்போது ரிசர்வ் வங்கி ஒரு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிட்ட வகை வங்கிகளின் நிர்வாகம் மற்றும் இயக்குனர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உச்சவரம்பு ஆண்டுக்கு ரூபாய் 20 லட்சம் ஆக இருந்து வருகிறது. இதனை தற்போது ரூ.30 லட்சம் ஆக மாற்ற ஆர்பிஐ முடிவு செய்துள்ளது. உயர்த்தப்பட்ட இந்த ஊதிய வரம்பு உடனடியாக அமலுக்கு வர உள்ளது.

BOI வங்கியில் ரூ.20,000/- மாத ஊதியத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!  

இதனால் தனியார் வங்கிகளை தவிர சிறு நிதி வங்கிகள், பணம் செலுத்தும் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் சொந்த துணை நிறுவனங்களும் இதன் மூலமாக பலனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழங்கப்படும் ஊதிய உயர்வானது வங்கியின் அளவு, நிர்வாகம், மற்ற இயக்குனர்களின் அனுபவம் மற்றும் பிற தொடர்புடைய காரணிகளை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கி நிர்வாகிகளின் ஊதியத்திற்கான அளவுகோள்களை ஆர்பிஐ நிர்ணயித்துள்ள நிலையில் இதனை உயர்த்துவதற்கு முன்பாக குழுவினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!