RBI வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு – நாளை ( டிச. 2) கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கலாம்!

0
RBI வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு - நாளை ( டிச. 2) கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கலாம்!
RBI வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு - நாளை ( டிச. 2) கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கலாம்!
RBI வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு – நாளை ( டிச. 2) கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கலாம்!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. அதன் படி மருத்துவ ஆலோசகர் பணிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்வமும், தகுதியும் இருப்பவர்கள் இந்த பணியிடங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த வங்கியில் மருத்துவ ஆலோசகர் பணியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த பணியில் சேர கல்வித்தகுதியாக அலோபதி மருத்துவ முறையில் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • அல்லது பொது மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

  • இந்த பணியில் சேர விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 2 (இரண்டு) ஆண்டுகள் தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மருத்துவப் பயிற்சியாளராக ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் அலோபதி மருத்துவ முறையைப் பயிற்சி செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • RBIயின் தற்போது வெளியிட்ட காலிப்பணியிடங்கள் சேர விண்ணப்பதாரர் வங்கியின் மருந்தகங்களில் இருந்து 10- 15 கிமீ சுற்றளவில் அவரது மருந்தகம் அல்லது வசிக்கும் இடம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த காலிப்பணியிடங்களில் விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுவர்களுக்கு ஒப்பந்த காலத்தில், ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் இந்த பணியில் சேர நேர்காணல் நடத்தப்படும். மேலும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, குறைந்தபட்ச தகுதித் தரநிலைகள் போன்றவற்றை உயர்த்துவதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது.
  • மேலும் நேர்காணலுக்கு தேர்வு செய்வது வங்கியின் முடிவே, நேர்காணலுக்கு அழைக்கப்படாத விண்ணப்பதாரர்களுடன் வங்கி எந்த கடிதப் பரிமாற்றத்தையும் மேற்கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி ரூ.821/- ஊதியத்தில் அண்ணா பல்கலைகலைக்கழக வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியில் சேர மேலே கொடுக்கப்பட்ட தகுதியும், ஆர்வமும் இருப்பவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 02.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!