
சல்மா உடன் சேர்ந்து சமையலில் கலக்கிய சரவணன், சந்தோஷத்தில் குடும்பத்தினர் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு ஜோடியாக சல்மா வருகிறார். சரவணன் கட்டாயம் வெற்றி பெறுவார் என சந்தியா தைரியமாக இருக்கிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் போட்டியில் தொடர்ந்து கலந்து கொள்ள புதிய போட்டி வித்தியாசமாக தொடங்குகிறது. அதில் போட்டியாளர்கள் ஜோடி சேர்ந்து விளையாட வேண்டும் என சொல்ல சரவணனிற்கு சல்மா ஜோடியாக வருகிறார். பின் சரவணன் என்ன செய்யலாம் என கேட்க, சல்மா நீங்க எதுவும் சமைக்காமல் இருந்தாலே போதும் என சொல்கிறார். நீங்க ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றது இல்லை. நீங்க எல்லாம் எப்படி தான் இவ்வளவு தூரம் வந்துருக்கீங்களோ, உங்க குடும்பம் வேற பாவமாக உங்களை பார்த்துக் கொண்டிருக்கு, நீங்க எனக்கு ஜோடியாக வர கூடாது என நினைத்தேன்.
TCS நிறுவனத்தில் ரூ.4.2 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஆனால் நீங்களே எனக்கு ஜோடியாக வந்துருக்கீங்க, சரி நான் என்ன செய்ய வேண்டும் என சரவணன் கேட்க, நீங்க ஒன்றும் செய்ய வேண்டாம் சும்மா இருந்தா போதும் என சொல்கிறார். பின் சமையல் செய்ய தேவையான பொருள்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அதில் பாவக்காய் இருக்க, சல்மாவிற்கு பாவக்காய் எதுவும் செய்ய தெரியாமல் இருக்கிறது. சரவணன் சமைக்க சொல்ல சல்மா எனக்கு பாவக்காய் பிடிக்காது எனக்கும் சமைக்க தெரியாது என சொல்கிறார். சரவணன் சிரித்து கொண்டே நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார்.
உங்களுக்கு தெரியவில்லை என்றால் அமைதியாக இருங்க, எனக்கு தெரியாது என சொன்னது எல்லாம் ரொம்ப தவறு, என் அம்மா எனக்கு பாவக்காய் வைத்து நிறைய சாப்பாடு செய்து கொடுத்திருக்கார். நான் 5 இல்லை 6 பொருள்கள் செய்வேன். ஆனால் நீங்க தான் செய்ய கூடாது என சொல்லிடீங்க. அதனால் நான் செய்யமாட்டேன் என சொல்ல, என்னிடம் மன்னிப்பு கேளுங்க நான் செய்கிறேன் என சொல்கிறார். சல்மா மன்னிப்பு கேட்க சரவணன் சமைக்க தொடங்குகிறார். சந்தியா அதை பார்த்து சந்தோசப்படுகிறார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – விரைவில் மீண்டும் 3% DA உயர்வு! தகவல் வெளியீடு!
சிவகாமி சரவணன் கண்டிப்பாக போட்டியில் வெற்றி அடைவான் என நம்பிக்கையாக இருக்க, சரவணன் சந்தோசமாக சமைக்கிறார். பின் சமைத்ததை ருசித்து பார்க்க நடுவர்கள் வருகின்றனர். அனைவரின் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு வர, அண்ணன் முகத்தில் எந்த டென்ஷனும் இல்லை பாருங்க என கேட்க, ஆமாம் பாவக்காய்யை பார்த்ததும் எல்லாரும் வேண்டாம் என நினைப்பார்கள் ஆனால் அண்ணன் சந்தோசமாக இருக்கிறார். நடுவர்கள் சரவணன் பக்கத்தில் வர, சரவணன் தைரியமாக அவர் செய்ததை எல்லாம் சொல்கிறார். போன சுற்றில் நீங்க சமைத்ததை வைத்து நாங்க திட்டினோம் ஆனால் நீங்க இதில் நன்றாக செய்திருக்கீங்க எல்லாம் நன்றாக இருக்கிறது என நடுவர் சொல்கிறார்.
சமைத்த கைக்கு முத்தம் கொடுக்க வேண்டும் போல இருப்பதாக சொல்ல, சரவணன் கையில் நடுவர் முத்தம் கொடுக்கிறார். பின் கலந்து கொண்ட போட்டியாளர்களின் யாரு வெற்றி பெற்று இருக்கிறார் என நடுவர்கள் சொல்ல, இறுதியாக சரவணன் சல்மா பெயரை சொல்கிறார்கள். இதுவரை பல சமையல் போட்டியில் நடுவராக இருந்திருக்கேன் ஆனால் பாவக்காய்யை வைத்து இத்தனை சமையல் செய்ததை நான் பார்த்ததே இல்லை என பெருமையாக சொல்கிறார்கள். அதை பார்த்து சல்மா கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.