அர்ச்சனாவை அசிங்கப்படுத்தும் சந்தியா, விவாகரத்து குழப்பத்தில் சரவணன் – இன்றைய எபிசோட்!

0
அர்ச்சனாவை அசிங்கப்படுத்தும் சந்தியா, விவாகரத்து குழப்பத்தில் சரவணன் - இன்றைய எபிசோட்!
அர்ச்சனாவை அசிங்கப்படுத்தும் சந்தியா, விவாகரத்து குழப்பத்தில் சரவணன் - இன்றைய எபிசோட்!
அர்ச்சனாவை அசிங்கப்படுத்தும் சந்தியா, விவாகரத்து குழப்பத்தில் சரவணன் – இன்றைய எபிசோட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி 2” சீரியலில் இன்று சந்தியா சரவணனிடம் பேச நினைக்கிறார். சரவணனின் நண்பர் ஒருவர் வந்து சரவணனை மேலும் குழப்புகிறார். சந்தியா சுமங்கலி பூஜையில் அர்ச்சனா பேசியதற்காக விளாசி விடுகிறார்.

“ராஜா ராணி 2” சீரியல்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “ராஜா ராணி 2” சீரியலில் இன்று சந்தியா தனது மாமியார் பேசியதை நினைத்து மிகவும் வருந்துகிறார். பின், சரவணனிடம் பேச வேண்டும் என்று கடைக்கு செல்கிறார். அங்கு சரவணன் சந்தியாவிடம் பேசுவதை தவிர்த்து விடுகிறார். இதனால் சந்தியாவிற்கு வருத்தமாக இருக்கிறது. அப்போது சரவணனின் நண்பர் ஒருவர் வருகிறார். தனக்கு திருமணம் என்று பத்திரிகை வைத்து விட்டு தனது திருமணத்திற்கு இருவரும் வர வேண்டும் என்று கூறுகிறார்.

மாநிலங்களின் மீது மொழி திணிக்கப்படாது – மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்!

அவருக்கு நிச்சயத்திற்கு பார்த்திருக்கும் பெண் படிக்காதவர் என்று சரவணன் பத்திரிகையினை பார்த்து தெரிந்து கொள்கிறார். அதனை பற்றி கேட்கவும் செய்கிறார். அதற்கு அவரது நண்பரோ படித்த பெண்ணாக இருந்தால் தனது பேச்சினை திருமணத்திற்கு பின் கேட்க மாட்டார் என்று கூறுகிறார். இதற்கு மாறாக சந்தியா கூற நினைக்கும் போது சரவணன் தனது நண்பன் கூறுவது சரி என்று கூறி விடுகிறார். இதனால் சந்தியாவிற்கு என்னவோ போல் ஆகி விடுகிறது.

TN Job “FB  Group” Join Now

பின், சந்தியா சரவணனுக்கு சாப்பாடு எடுத்து செல்கிறார். அப்போது எதிரில் சரவணன் வருவதை கவனிக்காமல் வருகிறார். இதனால் இருவரும் இடித்துக் கொள்கின்றனர். அப்போது சரவணன் கையில் வைத்திருக்கும் மாவு கொட்டி விடுகிறது. அதேபோல் இனி சந்தியா தனக்கு உணவு கொண்டு வர வேண்டாம் என்றும் கூறி விட்டு சென்று விடுகிறார். இதனால் சந்தியா கவலை அடைந்து விடுகிறார். பின், சந்தியா அர்ச்சனா எதற்காக அனைவர் முன்பும் அப்படி பேசியதாக அதட்டி கேட்கிறார். முதலில், ஏதேதோ சொல்லி மழுப்பும் அர்ச்சனா பின் பயந்து விட்டு சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here