ரயில்வேயில் எழுத்தர், கணக்காளர், தட்டச்சர் வேலைவாய்ப்பு – தமிழகத்தில் தேர்வு மையம்!

2
ரயில்வேயில் எழுத்தர், கணக்காளர், தட்டச்சர் வேலைவாய்ப்பு - தமிழகத்தில் தேர்வு மையம்!
ரயில்வேயில் எழுத்தர், கணக்காளர், தட்டச்சர் வேலைவாய்ப்பு - தமிழகத்தில் தேர்வு மையம்!
ரயில்வேயில் எழுத்தர், கணக்காளர், தட்டச்சர் வேலைவாய்ப்பு – தமிழகத்தில் தேர்வு மையம்!

திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியம் சார்பில் தட்டச்சர், நேரக் காப்பாளர் உள்ளிட்ட 8 பணி இடங்களுக்கான வேலைவாய்ப்பு தேர்வுகள் நேற்று (ஜூலை 23) முதல் துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கவில்லை என எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்வு வாரியம் விளக்கம் கொடுத்துள்ளது.

தேர்வு மையங்கள்:

திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்தின் கீழ் NTPC பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவிப்புகள் வெளியானது. அதன் படி ரயில்வே நிர்வாகத்தில் உள்ள கிளரிக்கல் பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முதல் கட்ட தேர்வுகளும், பின்னர் அதை தொடர்ந்து 6 கட்ட தேர்வுகளும் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பேரலை உருவான காரணத்தால் இந்த தேர்வுகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

ஹேமாவை கண்ணம்மா வீட்டிற்கு அனுப்பும் பாரதி – இன்றைய எபிசோட்!

இதையடுத்து தற்போது கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வரும் பட்சத்தில், கிளரிக்கல் பணிக்கான 7 ஆம் கட்ட தேர்வுகள் நேற்று (ஜூலை 23) முதல் துவங்கியுள்ளது. இந்த தேர்வுகள் ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெரும் தகுதியுடைய நபர்கள் ரயில்வே நிர்வாகத்தில், இளநிலை பிரிவில் எழுத்தர், கணக்காளர், தட்டச்சர், நேரக் காப்பாளர், பயணச்சீட்டு எழுத்தர் உள்ளிட்ட எட்டு இடங்களில் பணியமர்த்தப்டுவர். இந்நிலையில் திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்தின் கீழ் மதுரை கோட்டமும் வருவதால், தமிழகத்தை சேர்ந்தவர்களும் இந்த தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு – அரசுக்கு கோரிக்கை!

இத்தேர்வுகளை எழுதுவதற்கு தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கவில்லை என சில குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. இதற்கு விளக்கமளித்த திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியம், மதுரை மாவட்டம் அஸ்தினாம்பட்டியில் உள்ள PTR பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, பல்கலை நகரில் உள்ள செந்தாமரை கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள PSN பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி உள்ளிட்ட 3 மையங்களை தேர்வுக்காக ஒதுக்கியிருப்பதாகவும், இது தொடர்பான அறிவிப்பு கடந்த மாதத்திலேயே அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!