ரயில்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் – மத்திய ரயில்வே அறிவிப்பு! பொதுமக்கள் கவனத்திற்கு!

0
ரயில்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - மத்திய ரயில்வே அறிவிப்பு! பொதுமக்கள் கவனத்திற்கு!
ரயில்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - மத்திய ரயில்வே அறிவிப்பு! பொதுமக்கள் கவனத்திற்கு!
ரயில்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் – மத்திய ரயில்வே அறிவிப்பு! பொதுமக்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் பொதுவாக ரயில் பயணம் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இந்நிலையில் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு புதிய விதிமுறைகளை மத்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ரயில் பயணிகளின் கவனத்திற்கு:

இந்தியாவில் பொதுமக்கள் பயணிக்க பொது போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சேவைகளை போக்குவரத்து துறை வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக ரயிலில் சாதாரண மக்கள் முதல் பெரிய பணக்காரர்கள் வரை பயணம் மேற்கொள்கின்றனர். அத்துடன் ரயில் பயணத்தின் போது குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து பாட்டு பாடுவது, சத்தமாக பேசி மகிழ்வது, அரட்டை அடிப்பது உள்ளிட்டவைகளை செய்து மகிழ்வார்கள். மேலும் இரயில் பயண சீட்டு மிகவும் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனால் பொதுமக்கள் அதிகளவு ரயில் பயணம் மேற்கொள்வதையே விரும்புகின்றனர்.

தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜன.25) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – பொதுமக்கள் கவனத்திற்கு!

இந்த நிலையில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மிகவும் சத்தமாக பேசுவது மற்றும் மொபைல் போனில் அதிக சத்தமாக பாட்டு கேட்பது உள்ளிட்ட புகார்கள் பெற்றபட்டுள்ளது. அதனால் ரயில்களில் பயணம் செய்வோருக்கு புதிய விதிமுறைகளை மத்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ரயில்களில் பயணம் செய்பவர்கள் சத்தமாக பேசவும், மொபைல் போனில் சத்தமாக வைத்து பாட்டு கேட்கவும் தடை விதித்துள்ளது. அத்துடன் விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

TN TRB தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவணை வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு!

மேலும் இரவு 10 மணிக்கு மேல் இரயிலில் இருக்கும் அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் தனிமையில் உள்ள பெண்கள் பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து பயணிகள் ஏதேனும் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!